×

திருப்போரூர் ஒன்றியம் நெல்லிக்குப்பம் ஊராட்சி அம்மாப்பேட்டை கிராமத்தில் தனி வாக்குச்சாவடி மையம்: வாக்காளர்கள் வலியுறுத்தல்

திருப்போரூர், பிப்.15: நெல்லிக்குப்பம் ஊராட்சி அம்மாப்பேட்டை கிராமத்தில் தனி வாக்குச்சாவடி மையம்அமைக்க வேண்டும் என வாக்காளர்கள் வலியுறுத்துகின்றனர்.திருப்போரூர் ஒன்றியம் நெல்லிக்குப்பம் ஊராட்சியில் நெல்லிக்குப்பம், அகரம், அம்மாப்பேட்டை ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த 3 கிராமங்களுக்கும் சேர்த்து நெல்லிக்குப்பம் அரசு பள்ளி வாக்குச்சாவடி மையமாக உள்ளது. அம்மாப்பேட்டை கிராமத்தில் ஏற்கனவே 400 குடியிருப்புகள் இருந்த நிலையில், தற்போது புதிதாக தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உருவாகி உள்ளது. இதில் 800க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவர்களும் தற்போது புதிய வா் காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். நெல்லிக்குப்பம் ஊராட்சியில் மொத்தமுள்ள 2300 வாக்காளர்களில், 1200க்கும் மேற்பட்டோர் அம்மாப்பேட்டை கிராமத்தில் உள்ளதாக புதிய வாக்காளர் பட்டியல் மூலம் தெரியவந்துள்ளது.எனவே, அம்மாப்பேட்டை கிராமத்தில் புதிய வாக்குச்சாவடி மையம் அமைக்க வேண்டும் என வாக்களர்கள் கூறுகின்றனர்.

அம்மாப்பேட்டை கிராமத்தில் இருந்து பிரதான ஊராட்சியான நெல்லிக்குப்பம் 3 கிமீ தூரம் உள்ளது. இதனால் நீண்ட தூரம் சென்று வாக்களிக்க விரும்பாத வாக்காளர்கள், வாக்களிப்பதில் அக்கறை காட்டுவதில்லை.  இதையொட்டி வாக்குப்பதிவு குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, அம்மாப்பேட்டை கிராமத்தில் புதிய வாக்குச்சாவடி மையம் ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

Tags : village ,Tirupoorur Union Nellikkuppam ,voters ,polling center ,
× RELATED பைக், டிராக்டர் நேருக்கு நேர் மோதி...