×

கூடலூர்- நிலம்பூர் பகுதியில் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

ஊட்டி, பிப். 13: கூடலூரில் இருந்து நிலம்பூர் வரை கூடுதல் பஸ் இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் நாள் தோறும் ஊட்டி மற்றும் கூடலூர் போன்ற பகுதிகளுக்கு பல்வேறு காரணங்களுக்காக வந்து செல்கின்றனர். குறிப்பாக தமிழக-கேரள எல்லை என்பதால், இரு மாநிலங்களில் இருந்தும் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில், கூடலூர்- நிலம்பூர், சுல்தான் பத்தேரி போன்ற பகுதிகளில் இயக்கப்படும் பஸ்களில் காலை மற்றும் மாலை நேரத்தில் மாணவ,மாணவிகளின் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. இதனால் மற்ற பயணிகள் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் கூடுதல் பஸ்களை இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kollur ,area ,Nilambur ,
× RELATED மதுராந்தகம் பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்கள்