×

திருவையாறில் சர்வோதய மேளா

திருவையாறு, பிப். 13: திருவையாறில் தஞ்சை மேற்கு சர்வோதய சங்கம் சார்பில் காந்தியடிகள் மறைந்த ஜனவரி 30 முதல் பிப்ரவரி 12(நேற்று) வரை சர்வோதய மேளாவாக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
 பிப்ரவரி 12ம் தேதி காந்தியடிகளின் அஸ்தி திருவையாறு காவிரி ஆற்றில் புஷ்ப மண்டப படித்துறையில் கரைக்கப்பட்ட நாளை முன்னிட்டு காந்தியடிகளின் அலங்கரிக்கப்பட்ட திருவுருவ படம் திருவையாறு நான்கு வீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மீண்டும் புஷ்ப மண்டபத்தில் நிறைவடைந்தது.
 அங்கு சர்வமத பிரார்த்தனை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தஞ்சை மேற்கு சர்வோதய சங்க தலைவர் சண்முகவேல் தலைமை வகித்தார்.
அதை தொடர்ந்து காந்தியடிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் தஞ்சை மேற்கு சர்வோதய சங்க செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் சுப்ரமணியன், முன்னாள் தலைவர் நெடுமாறன், திருவையாறு கிளை தலைவர் ராஜா மற்றும் நூற்றுக்கணக்கான சர்வோதய சங்க ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Sarvodaya Mela ,
× RELATED வானம் மேகமூட்டம், திடீர் மழையால்...