×

பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு ஜிஎஸ்டி.,யில் விலக்கு

ஈரோடு, பிப். 12:  ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சாய, சலவை மற்றும் தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் காவிரி, பவானி ஆறுகள் மாசுபடுவதோடு நிலத்தடி நீரும் கடுமையாக மாசுபடிந்து வருகிறது. இதை தடுக்க சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும் என மாசுகட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க கூடுதல் செலவு ஏற்படுவதால் சிறு, குறு தொழிற்சாலைகளால் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க முடியாத நிலை உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் சாய, சலவை, தோல் தொழிற்சாலைகள் அமைந்துள்ள இடங்களை ஒருங்கிணைத்து பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க மாசுகட்டுப்பாடு வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஈரோடு, பவானி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் சாய மற்றும் தோல் தொழிற்சாலைகளை ஒருங்கிணைத்து 8 இடங்களில் பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க மாசுகட்டுப்பாடு வாரியம் முடிவு செய்துள்ளது.

 அந்தந்த பகுதியில் உள்ள தொழிற்சாலை உரிமையாளர்களின் நிதி ஆதாரத்தோடு மத்திய, மாநில அரசுகளின் மானியத்துடன் பொதுசுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.  இது குறித்து ஈரோடு மாவட்ட சிறு தொழில் முனைவோர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் சாய, சலவைபட்டறைகள் குறைந்த முதலீட்டில் தான் செயல்பட்டு வருகின்றன. தனியாக கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது என்பது சாத்தியமில்லை என்பதால், தான் பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைக்கப்படும் பொதுசுத்திகரிப்பு நிலையத்திற்கு ஜிஎஸ்டி., வரி 12 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. இதே போல சுத்திகரிப்பு நிலையங்களில் பயன்படுத்தப்படும் கழிவு நீர் இயந்திரங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் மானியம் கொடுத்தும் எவ்வித பயனும் இல்லை. எனவே பொதுசுத்திகரிப்பு நிலையங்களுக்கு முழுமையாக வரிவிலக்கு வேண்டும். அல்லது குறைந்த பட்ச ஜிஎஸ்டி., 5 சதவீதம் மட்டும் விதிக்க வேண்டும். நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இது தொடர்பாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும். இவ்வாறு

Tags : refineries ,
× RELATED சுத்திகரிப்பு நிலையங்களுக்கு புது கட்டுப்பாடுகள் விதிப்பு