×

சாத்தான்குளம் அருகே தரைநிலை தொட்டியில் உப்புநீர் கலந்து குடிநீர் விநியோகம்?

சாத்தான்குளம், பிப். 12:  சாத்தான்குளம் அருகே அரசூரில் தரைநிலை நீர்த்தேக்கத் தொட்டியில் உப்புநீர் கலந்து குடிநீர் விநியோகிப்பதால் கிராம மக்கள் பாதிக்கப்படுவதாக இந்து முன்னணி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் சுந்தரவேல், கலெக்டருக்கு அனுப்பியுள்ள புகார் மனு விவரம்: அரசூர் ஊராட்சிக்கு உட்பட்ட அரசூரில் ஏரல், உடன்குடி முப்பது குடிசை குடியிருப்பு குடிநீர் திட்டத்தின்கீழ் தரைநிலை நீர்த்தேக்க கட்டப்பட்டுள்ளது. பணிகள் முடிந்து  மக்களுக்கு அதிக தண்ணீர் வழங்குதற்கான வெள்ளோட்டமும் பார்த்து முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த குடிநீர் தொட்டிக்கு முழுமையான அளவு தண்ணீர் ஏற்றி மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் மக்களுக்கு பயன்படாத நிலையிலேயே உள்ளது. மேலும் அங்குள்ள ஆழ்துளை கிணற்றிலும் தண்ணீர் அளவு குறைந்து போனதால்  போதிய குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.மேலும் இந்த குடிநீர்  தொட்டியில் ஆற்று நீரையும், உள்ளூர் ஆழ்துளை கிணற்று உப்பு தண்ணீரையும் கலந்து மக்களுக்கு குடிநீராக விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதனால் பாதிக்கப்படும் மக்கள், குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  எனவே, இதுவிஷயத்தில் கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags : saline waters ,Satanakulam ,
× RELATED சாத்தான்குளம் அருகே குடிநீர் பிரச்னை...