×

சாத்தான்குளம் அருகே குடிநீர் பிரச்னை தீர்க்க வலியுறுத்திகிராம மக்கள் மறியல் போராட்டம்

சாத்தான்குளம், ஆக. 30: சாத்தான்குளம் அருகே குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கக் கோரி கிராம மக்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாத்தான்குளம் யூனியன் அரசூர் பஞ்சாயத்திற்குட்பட்ட கலியன்விளை கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி பொதுமக்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று கலியன்விளையை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள் காலிகுடங்களுடன் இடைச்சிவிளையில் திசையன்விளை -உடன்குடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து, சாத்தான்குளம் ஒன்றிய ஆணையாளர் சுரேஷ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாசானமுத்து, தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த், சாத்தான்குளம் யூனியன் துணை சேர்மன் அப்பாத்துரை ஆகியோர் விரைந்து வந்து மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் நிதி ஒதுக்கீடு பெறப்பட்ட பணிகள், நாளை(30ம் தேதி) தொடங்கப்படுமென உறுதி அளிக்கப்பட்டது. இதையேற்று பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post சாத்தான்குளம் அருகே குடிநீர் பிரச்னை தீர்க்க வலியுறுத்திகிராம மக்கள் மறியல் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Satankulam ,Satanakulam ,
× RELATED உளவியல் ஆலோசனை கூட்டம்