×

கடமலைக்குண்டு அருகே தண்ணீர் தேடி வந்த கடமான் பலி

வருசநாடு, பிப். 8: கடமலைக்குண்டு அருகே டாணா தோட்டம் மலைப்பகுதியில் தண்ணீருக்காக ஓடிவந்த கடமான் பலியானது.
கடமலை மயிலை ஒன்றிய பகுதியில் கடமான், புள்ளி மான், மிலா உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. இவை அடிக்கடி தண்ணீர் தேடி வந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. கடமலை மயிலை ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து வனத்துறை அதிகாரிகளும் மலைப்பகுதிகளில் சிமென்ட் தொட்டி விலைக்கு வாங்கி மலைப்பகுதியில் வைத்து அதில் தண்ணீரை ஊற்றி நிரப்பி வருகின்றனர். இந்நிலையில் நேற்று கடமலைக்குண்டு டாணா தோட்டம் பகுதியில் தண்ணீர் தேடி வந்த கடமான் ஒன்று பலியானது. கண்டமனூர் வனச்சரக அலுவலர் குமரேசன், வனவர் செல்வராஜ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், வனக்காவலர்கள், கால்நடை மருத்துவர் வெயிலான் ஆகியோர் இறந்த மானை பார்வையிட்டனர். இறந்த மானின் உடலை பிரேத பரிசோதனை செய்து அங்கேயே புதைத்தனர்.
இதுகுறித்து கண்டமனூர் வனச்சரகர் குமரேசன் கூறுகையில், ‘கடமலை மயிலை ஒன்றியத்தில் மழையின் அளவு குறைந்து உள்ளதால் விலங்குகளுக்கு குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது. எனவே ஒவ்வொரு நாளும் செந்நாய்களால் துரத்தப்பட்டு மான்கள் இறந்து வருகிறது.
சில மான்கள் தண்ணீர் இல்லாமல் உயிரை மாய்த்துக்கொள்கிறது. இதை தடுப்பதற்கு சிமென்ட் தொட்டி வைத்து தண்ணீர் ஊற்றி வருகிறோம்’ என்றார்.

Tags : Kadimalai ,
× RELATED கடமலை - மயிலை ஒன்றியத்தில் கண்மாய்கள்...