×

சாலையோரம் வாகனங்களை நிறுத்துவதால் திருப்புத்தூரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் அவதிப்படும் பொதுமக்கள்

திருப்புத்தூர், பிப்.8:  திருப்புத்தூர் நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருப்புத்தூர் நகர் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும். திருப்புத்தூரிலிருந்து எந்த நேரத்திலும் எல்லா ஊர்களுக்கும் பஸ் வசதி உள்ளது. மேலும் அனைத்து ஊர்களுக்கும் செல்ல கூடிய முக்கிய சாலைகள் திருப்புத்தூர் வந்து செல்லும் சாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மதுரை, திருச்சி, தேவகோட்டை, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், கல்லல் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்கள், மணல் மற்றும் சரக்கு லாரிகள், கார்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் திருப்புத்தூர் நகருக்குள் தினந்தோறும் வந்து செல்கின்றது.
திருப்புத்தூர்-மதுரை ரோட்டை விரிவு செய்ய வழியில்லாமல் உள்ளது. இதனால் இந்த ரோட்டையே அனைவரும் பயன்படுத்துவதால் அடிக்கடி ேபாக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் அவசரமாக செல்ல வேண்டிய ஆம்புலன்ஸ்களும் கூட செல்ல முடியாமல் தவிக்¢கின்றனர்.
 மேலும் இந்தப் பகுதியில் உள்ள வங்கிகளுக்கும், ஆஸ்பத்திகளுக்கும், கடைகளுக்கும் வருபவர்கள் ஆட்டோ, டூவிலர்களை ரோட்டோரத்தில் நிறுத்தி விட்டு செல்வதால் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகமாகிறது.
மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. இதை தவிர்க்க ரோட்டோரத்தில் டூவிலர்கள் மற்றும் ஆட்டோக்களை நிறுத்த தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED சிவகங்கையில் கோடைகால கால்பந்து பயிற்சி நிறைவு விழா