×

திருப்புத்தூரில் ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு ‘ஸ்வீட்’ போலீசார் அசத்தல்

திருப்புத்தூர், பிப்.8:  திருப்புத்தூர் நகர் காவல்நிலையம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா நடைபெற்றது. இதில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
திருப்புத்தூரில் நடைபெற்ற விழாவிற்கு நகர் காவல் இன்ஸ்பெக்டர் ஆனந்தி தலைமை வகித்தார். எஸ்.ஐ., கோடீஸ்வரன் முன்னிலை வகித்தார். நாகப்பா மருதப்பா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஸ்கௌட் ஜே.ஆர்.சி. மாணவிகள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் பெரிய தபால்நிலைய சாலை, பேருந்துநிலையம், மதுரை ரோடு ஆகிய பகுதிகளில் பேரணி ெசன்றனர். இதில் பொதுமக்கள், வியாபாரிகள், வாகனஓட்டிகளுக்கும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றியும், தலைக்கவசம் அணிவதன் கட்டாயம் குறித்தும், நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணிவது குறித்தும், மது அருந்தி வாகனம் ஓட்டக்கூடாது எனவும் அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிந்து வாகனம் ஓட்டியவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
 நிகழ்ச்சியில் சிறப்பு எஸ்.ஐ., ரவி மற்றும் போக்குவரத்து காவலர்கள், காவேரி மருத்துவமனை குழுவினர் கலந்து கொண்டனர். நாச்சியாபுரத்தில் காவல்துறை சார்பில் ஜெயம்கொண்ட விநாயகர் பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு எஸ்.ஐ., ராஜா தலைமை வகித்து பள்ளி மாணவர்களிடம் சாலைப்பாதுகாப்பு குறித்தும், பெற்றோர்கள் சிறுவர்களை வண்டி ஓட்ட அனுமதிக்கக் கூடாது எனவும், சாலையில் செல்லும் போது போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Tags : Sweet ,policemen ,
× RELATED சென்னையில் 3 வாக்கு எண்ணும் மையங்களில் 3,000 போலீசார் பாதுகாப்பு