×

செம்பட்டி- நிலக்கோட்டை இடையே புதுச்சத்திரம் வழியாக புதிய பஸ் ரூட்

செம்பட்டி, பிப். 8: செம்பட்டி- நிலக்கோட்டை இடையே புதுச்சத்திரம் வழியாக அரசு பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செம்பட்டி அருகே எஸ்.புதுக்கோட்டை, கிருஷ்ணாபுரம், ராமசாமிபுரம், புதுசுக்குலாபுரம், சுக்குலாபுரம், புதுச்சத்திரம், பூதிப்புரம் கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளை சேர்ந்த மாணவ மாணவிகள், விவசாயிகள், வியாபாரிகள், நோயாளிகள் என அனைத்து தரப்பினரும் திண்டுக்கல், நிலக்கோட்டை செல்ல வேண்டும் என்றால் சுமார் 2 கிமீ தூரமுள்ள நிலக்கோட்டை- செம்பட்டி ரோட்டில் உள்ள காமன்பட்டி பிரிவு அல்லது பெருமாள்கோவில் பஸ்ஸ்டாப் செல்ல வேண்டும். இதனால் இரவுநேரங்களிலும், மழைக்காலங்களிலும் செல்வதற்கு பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக பெண்கள் தனியாக செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி செம்பட்டி- நிலக்கோட்டை இடையே எஸ்.புதுக்கோட்டை, புதுச்சத்திரம் வழியாக திண்டுக்கல், நிலக்கோட்டைக்கு அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Bus Route ,Newborns ,Champagati-Nilkottai ,
× RELATED மாநகராட்சி பகுதிகளில் உள்ள 96 கி.மீ பஸ்...