×

ரேசன் கடை ஊழியர்களின் உள்ளிருப்பு போராட்டத்தால் பொதுமக்கள் பாதிப்பு

ஊட்டி, பிப். 7: வேலைக்கு ஏற்ற ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஊட்டியில் ேரசன் கடைக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
  சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என ரேசன் கடையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இவர்களின் போராட்டத்தை தமிழக அரசு கண்டுக் கொள்ளமல் உள்ளது. இதனால், அவ்வப்போது ஆர்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று ஊட்டியில் உள்ள 45 ேரசன் கடை ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணிக்கு வந்த போதிலும், அவர்கள் பொதுமக்களக்கு ேரசன் பொருட்களை வழங்காமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பொருட்கள் விநியோகம் செய்யும் பிஓஎஸ்., இயந்திரங்களை பயன்படுத்தவில்லை. இதனால், அத்தியாவிசய பொருட்களை வாங்க வந்த பொதுமக்கள், பொருட்கள்  கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இவர்களின் கோரிக்கைைய அரசு ஏற்காவிட்டால், வரும் 13ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளனர்.

Tags : sitar shop workers ,
× RELATED 658 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள்...