×

நைனாமலையில் கடும் வறட்சியால் ஊருக்குள் புகுந்த குரங்குகள் அட்டகாசம்

சேந்தமங்கலம், பிப்.7: நைனாமலையில் கடும் வறட்சி நிலவுவதால், தண்ணீர் மற்றும் உணவு தேடி ஊருக்குள் புகுந்த குரங்குகள் அட்டகாசம் செய்து வருகிறது. நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அடுத்துள்ள நைனாமலையில் ஏராளமான குரங்குகள் உள்ளது. தற்போது அங்கு கடும் வறட்சி நிலவுவதால், குரங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி ஊருக்குள் வரத்தொடங்கியுள்ளது. நைனாமலை அருகே உள்ள மின்னாம்பள்ளி கிராமத்திற்குள் 5க்கும் மேற்பட்ட குரங்குகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. வீட்டிற்கு வெளியே இருக்கும் மின்விளக்குகளை உடைப்பது, காய்கறிகளை எடுத்துச்செல்வது, வீடுகளுக்குள் புகுந்து மளிகை பொருட்களை கொட்டிவிடுவது போன்ற அட்டகாசங்களை செய்து வருகிறது. குரங்கினை விரட்ட முயன்றால் அவை கடிக்க வருவதால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். மேலும், குழந்தைகளை துரத்துகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் நாமக்கல் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து, வனப்பகுதியில் விடவும், அதற்கு தேவையான தண்ணீர் உணவு ஆகியவற்றை வழங்கிட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : city ,drought ,
× RELATED வாணியம்பாடி அதிமுக நகர துணை செயலாளர் கோவிந்தனுக்கு பிடிவாரண்ட்