×

கடையம் அம்மன் கோயில் திருவிழாவில் ேதரோட்டம்

கடையம், பிப். 7:  கடையம் அடுத்த தெற்குகடையத்தில் உள்ள முப்பிடாதி அம்மன் மற்றும் கீழக்கடையம் 18 பட்டி நாடார்களுக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளி அம்மன் கோயில் தை திருவிழா, கடந்த ஜன.22ம் தேதி கால்நாட்டு நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த 25ம் தேதி பால்குடம் ஊர்வலம், சிறப்பு அபிஷேக அலங்காரம், ஆராதனையும், அன்னதானமும் நடந்தது.ஜன.29 முதல் பிப்.4ம் தேதி வரை பல்வேறு சமுதாயத்தினர் சார்பில் மண்டகப்படி நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று முன்தினம் தேரோட்ட மண்டகப்படியும், காலையில் தீர்த்தம் எடுத்து வருதல், அம்மன் வீதியுலா நடைபெற்றது. நேற்று அதிகாலை 3 மணியளவில் முப்பிடாதி அம்மன் தேருக்கு எழுந்தருளியதை அடுத்து பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.தெற்குகடையம் விநாயகர் கோயில் முன்பு முப்பிடாதி அம்மன், பத்ரகாளி அம்மன் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் கடையம், கீழக்கடையம், மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர்.மதியம் அபிஷேகம், இரவு 8 மணிக்கு அலங்கார தீபாராதனை, அதிகாலை 3 மணிக்கு பூம்பல்லக்கில் அம்பாள் வீதிஉலா நடந்தது.

Tags : Kaitham Amman Temple ,festival ,
× RELATED திருமயம் அருகே கோயில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு