×

ஏ.டி.சி., பகுதியில் சீரமைப்பு பணி

ஊட்டி, பிப். 6: ஊட்டி ஏடிசி., பகுதியில் கிராமப்புற பகுதிகளுக்கு செல்லும் பஸ் நிறுத்தம் பகுதியில் கழிவுநீர் வழிந்தோடுவதை தடுக்க நகராட்சி மூலம் சீரமைப்பு பணிகள் துவக்கப்பட்டுள்ளது.   
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரின் மையப்பகுதியாக ஏ.டி.சி., பகுதி விளங்கி வருகிறது. இப்பகுதியில் தான் நகராட்சி மார்க்கெட் வளாகம் உள்ளதால் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதனால் இப்பகுதி எப்ேபாதும் பிஸியாக காணப்படும். ஊட்டி சுற்று வட்டார கிராமப்புறங்களுக்கு செல்லும் பஸ் நிறுத்தம் உள்ளது.
  எப்பநாடு, தேனாடுகம்பை, அணிக்கொரை, ெகந்தோரை, கப்பச்சி, தும்மனட்டி உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் இங்கிருந்து தான் செல்கிறது. இது தவிர தனியார் மினிபஸ்களும் இப்பகுதியில் இருந்து தான் புற்பட்டு செல்கின்றன.
இதனால் பயணிகள் இங்குள்ள நிழற்குடையில் காத்திருப்பார்கள். இந்நிலையில் ஏ.டி.சி.,யில் காந்தி மைதானத்தை ஒட்டி பயணியர் நிழற்குடை உள்ளது.
இதன் முன்புறம் நகராட்சி கழிப்பிடம் உள்ளது. அதன் அருகே இருந்து கழிவு நீர் சாலையில் ஓடுகிறது. அந்த கழிவு நீர் செல்லும் பகுதியில் தான் அரசு பஸ்கள் மற்றும் மினி பஸ்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது.
எனவே பயணிகளின் நலன் கருதி சாலையில் கழிவுநீர் ஓடுவதை தடுக்கும் வகையில் உடனயாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் ஊட்டி நகராட்சி சார்பில் சாலையில் கழிவுநீர் வழிந்தோடுவதை தடுக்கும் நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன. இதற்காக ஜே.சி.பி., இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு மண்ணிற்கு அடியில் குழாய்கள் அமைந்துள்ள அதனை கோடப்பமந்து கால்வாயுடன் இணைக்கப்பட உள்ளது.

Tags : ATC ,
× RELATED சென்னை விமானநிலையத்தில் கட்டுப்பாட்டு அறையின் ஏடிசி டவரில் தீ விபத்து