×

நீலாம்பூர் பைபாஸ் சாலையில் இணைப்பு பகுதியில் வேகத்தடை

கோவை, பிப்.6: கோவை நீலம்பூர் பை-பாஸ் ரோட்டில் கிராம இணைப்பு சாலைகளில், வேகத்தடை அமைக்க, வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 கோவை நீலம்பூரில் துவங்கி வாளையாறு வரை, பை-பாஸ் ரோடு அமைக்கப்பட்டுள்ளது.  இந்த சாலையில் அத்தப்பகவுண்டன்புதுாரை அடுத்த ரயில்வே மேம்பாலத்தை கடந்து சென்றால், இருகூர் செல்லும் ரோடும், ராவத்துார் செல்லும் ரோடும் இணைகின்றன.
 மேலும், வெங்கிட்டாபுரம், குளத்துார், ராவத்துார், அத்தப்பகவுண்டன்புதுாருக்கு செல்லும் ரோடுகளும் இந்த சாலையில் சந்திக்கின்றன. இந்த இடங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வருகின்றனர். இங்கு விபத்துகளை தவிர்க்க, கிராம சாலைகள் இணையும் பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டுநர்கள் அறியும் வகையில், ஒளிரும் எச்சரிக்கை பலகை வைக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : connection area ,Nilambur Bypass Road ,
× RELATED மதுக்கரை நீலம்பூர் பைபாஸ் ரோடு விரிவாக்க எதிர்பார்ப்பு