×

அரிமளம் பகுதியில் வறட்சி நிலவிய போதும் 2வருட இன்னல்களை கடந்து சம்பா அறுவடை வெற்றி கண்ட விவசாயிகள்

திருமயம்,பிப்.6:அரிமளம் அருகே விவசாயிகளின் துணிச்சலால் வறட்சி நிலவிய போதும் கடந்த இரண்டு வருடங்களாக சம்பா நடவு செய்து விவசாயிகள்
வெற்றி கண்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் , திருமயம் பகுதிகளில் விவசாயிகளுக்கு கடந்த 10ஆண்டுகளுக்கு மேலாக பாம்பாறு, வெள்ளாறு சம்பா நடவுக்கு கை கொடுக்க வில்லை. இதனால் வருடம் தோறும் சம்பா நடவு செய்யும் விவசாய நிலங்கள் படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது அப்பகுதியில் 20 சதவீத திற்கு குறைவான அளவே விவசாய பணிகள் நடை பெற்று வருகிறது. இதே நிலை நீடித்தால் வருங்காலங்களில் விவசாய நிலங்களின் அளவு மேலும் குறைய வாய்ப்புள்ளதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இதனி டையே அரிமளம் அருகே உள்ள மிரட்டுநிலை கிராம விவசாயிகள் தொடர் வறட்சியையும் பொருட்படுத்தாமல் அப்பகுதி விவசாயிகளின் துணிச்சலான முடிவால் கடந்த இரண்டு வருடங்களாக சம்பா நடவு செய்து பல்வேறு இன்னல் களை கடந்து அறுவடை செய்துள்ளனர்.
இத பற்றி அப்பகுதி விவசாயிகளிடம் கேட்ட போது: கடந்த 9 வருடங்களாக பருவ காலங்களில் மழை சரியாக பெய்வதில்லை. இதனால் எங்கள் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் அனைத்தும் சீமை கருவேல மரங்கள் மண்டி காடு போல் மாறி வருகிறது. இதேபோல் சுமார் 300ஏக்கர் பரப்பளவு கொண்ட மிரட்டுநிலை வயலும், கருவேல
மரங்கள் மண்டி கிடந்தது.
கடந்த ஆண்டு சம்பா பருவத்தின் போது ஒரு நாள் மட்டும் நல்ல மழை பெய் தது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்த மழை இல்லாத நிலையிலும் சம்பா நடவு க்கு போதுமானநீர் கையிருப்பில் இல்லாத போதிலும் வயல்களில் இருந்த கருவேல மரங்களை அகற்றி விட்டு சம்பா நடவு செய்ய நாற்றங்கால் செப்பனி ட்டு நெல் விதைப்பு செய்தோம். இதனை தொடர்ந்து மழை இல்லாததால் நாற்று கள்
வீணாகும் நிலைக்கு வந்தது.
அப்போது ஒரு மழை பெய்தது இதனை பயன்படுத்தி நடவு பணிகளை மேற் கொண்டோம். அதன் பின்னர் மழை இல்லாததால் பயிர்கள் கருகும் நிலைக்கு வந்தது. ஆனால் எங்கள் பகுதி விவசாயிகள் கிணற்று நீர், ஆழ்துளை நீரை பயன் படுத்தி இரவு, பகலாக கஷ்டப்பட்டு சம்பா
பயிர் அறுவடை செய்தனர். அதே போல் நடப்பு சம்பா பருவத்திலும், கஜாபுயலின் போது பெய்த மழையை தவிர தொடர் மழை இல்லாமல் பொய்த்து போனது. இருந்த போதிலும் மிரட்டு நிலை சுற்றுவட்டார கிராம விவசாயிகள் துணிச்சலாக சம்பா நடவு செய்து தற்போது ஒரு சில விவசாயிகள் சம்பா பயிர் அறுவடை செய்து வரும் நிலையில் மிரட்டுநிலை பெரிய கண்மாயில் போதுமான நீர் கையிருப்பில் உள்ளதால் நடப்பு சம்பா சாகுபடி தண்ணீர் தட்டு
பாடின்றி விளையும் என்றனர்.
திருமயம், அரிமளம் பகுதியில் பெரிய அளவில் தொழிற்சாலைகள், குடிசைத் தொழில்கள் ஏதும் இல்லாத நிலையில் விவசாயமே அப்பகுதி மக்களின் முக்கிய தொழிலாகும். கடந்த சில ஆண்டுகளாக நிலவும் கடும் வறட்சியால் விவசாயம் முற்றிலும் பொய்த்து போய் விவசாயம் மூலம் வருவாயை நம்பி இருந்து விவசாயிகள் விவசாய நிலத்தை தரிசாக போட்டு விட்டு கூலி வேலைக்கு சென்று வருகின் றனர்.தற்போது அப்பகுதியில் விவசாயம் செய்யும் விவசாயிகளும் விவசயத்தை லாப நோக்கில் பார்க்கமால் வேறு வழியின்றி விவசாயம் செய்து வருகின்றனர். காரணம் விவசாய பணிகளுக்கு புதிய இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்ட போதிலும் ஒரு சில வேலைகளுக்கு மனித உழைப்பு தேவைப்படுகிறது. அப்படி இருக்கையில் களை எடுக்க, வரப்பு வெட்ட உள்ளிட்ட பணிகளுக்கு பணியாட்களை பிடிப்பது
கடும் சிரமமாக உள்ளது.
இதனால் அதிக சம்பளத்திற்கு பணியாட்கள் வரவழைக் கப்படுவதால் விவசாயத்திற்கு ஆகும் செலவுகள் மேலும் அதிகரிக்கிறது. இது மட்டு மல்லாது உரம், பூச்சி கொல்லி மருந்துகள் விலைகளும் அதிகரிப்புக்கு ஏற்ப நெல் கொள்முதல் விலை இருப்பதில்லை இதனால் விவசயாத்தில் லாபம் கிடை ப்பதில்லை என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். பூச்சி தாக்குதல் அதிகரிப்பு
பருவநிலை மாற்றத்தால் சம்பா பயிர்களில் பூச்சி தாக்குதல் அதிகரித்தது.இதனால் தற்போது அப்பகுதியில் அனைத்து விவசாயிகளும் இயற்கை விவசாயத்தை கை விட்டு பூச்சி தாக்குதலை கைவிட்டு உரம், பூச்சி மருந்துகளை அதிகளவு பயன் படுத்தி வருகின்றனர். இருந்த போதிலும் இயற்கை விவசயத்தின் போது கிடைத்த மகசூல் கிடைக்காமல் இருப்பது ஒருபுறம் இருக்க அதிகளவு பூச்சி கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதால் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்பட்டு விவசாய நிலத் தில் உள்ள நுண்ணுயிரிகள் அழிந்து வருகிறது.
பருவம் தவறிய விவசாயத்தால் மகசூல் குறைவு
திருமயம், அரிமளம் பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு 15 வருடங்களுக்கு முன்னர் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் சம்பா விவசாய பணிகளை தொடங்குவது வழக்கம். ஆனால் பருவநிலை மாற்றத்தால் பருமழை தாமதமாக பெய்ய தொட ங்கியது. இதனால் அப்பகுதி விவசாயிகள் சம்பா பயிர் விவசாய பணிகளை தொடங்குவது தள்ளி போனது.

Tags : Samba ,region ,drought ,Arimalam ,
× RELATED செம்பனார்கோயில் பகுதியில் மண்வளத்தை மேம்படுத்த வயலில் ஆட்டுக்கிடை