×

வாசுதேவநல்லூர் தங்கப்பழம் பள்ளி ஆண்டுவிழா

நெல்லை, பிப். 6: வாசுதேவநல்லூர் தங்கப்பழம் மேல்நிலைப்பள்ளியில் இரண்டாம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவின் முதல்நாளான 4ம் தேதி அன்று மழலையர் பிரிவு மற்றும் முதல் 2 வகுப்புகளுக்கு ஆண்டுவிழா நடந்தது. பள்ளி நிர்வாகி தங்கப்பழம் தலைமை வகித்தார். தாளாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பேச்சாளர் பர்வீன் சுல்தானா, ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் டெய்சி ராணி வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். பர்வீன் சுல்தானா பேசியதாவது: வாழ்க்கையின் யதார்த்தங்கள், குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை எடுத்துரைத்து பெண் குழந்தைகளின் பெருமைகளை விளக்கினார். மாணவ, மாணவிகளுடன் ஜெகன் உரையாடினார். 2018 -19ம் கல்வியாண்டில் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.தொடர்ந்து மழலையர் பிரிவு மற்றும் முதல் இரண்டு வகுப்பு குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

Tags : Vasudevanallur Thottipalam School Anniversary ,
× RELATED அடையாளம் தெரியாத முதியவர் உடல் மீட்பு