×

பொன்னமராவதி மின்வாரிய அலுவலகத்தில் கஜா புயலில் சாய்ந்த மரங்கள் அகற்றப்படுமா?

பொன்னமராவதி,பிப்.5:  பொன்னமராவதி மின் வாரிய அலுவலகத்தில் கஜா புயலில் சாய்ந்து கிடக்கும்  மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 கடந்த நவம்பர் 16ம் தேதி வீசிய கஜா புயலில் பொன்னமராவதி பகுதியில்  ஆயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்தது. இந்த மரங்களை உடனே அப்புறப்படுத்தப்பட்டது. ஆனால் பொன்னமராவதியில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய  அலுவலக சுற்றுச்சுவரில் சாய்ந்து கிடக்கும் மரங்கள் அப்புறப் படுத்தபடாமல்  காய்ந்து சருகாகி கிடக்கிறது.
இதில் வழிபோக்கர்கள் யாராவது சிகரெட் மற்றும்  அணைக்கப்படாத தீப்பற்றினால் தீவிபத்து ஏற்படும் சூழல் உள்ளது. மேலும் உள்ள  வாரியினை இந்த மரங்கள் அடைத்து கிடக்கிறது. மழைபெய்தால் மழை தண்ணீர்  போக முடியாத நிலை ஏற்படும். எனவே மின்வாரிய அலுவலக கட்டிடத்தின் மீது சாய்ந்து கிடக்கும்  மரங்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : storm ,Ghaja ,power station ,Ponnaravarathi ,
× RELATED மேட்டூர் அனல் மின்நிலையத்தில் உற்பத்தி பாதிப்பு..!!