×

பயனற்று கிடக்கும் தா.பழூர் பேருந்து நிறுத்தம்

தா.பழூர்,பிப்.5: பயணிகளுக்கு பயன் அற்று சாக்கடையாக தா,பழுர் பேருந்து நிறுத்தம் உள்ளது.
அரியலூர் மாவட்டம்  தா.பழூர் பேருந்து நிலையத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு இல்லாத நிலையில் உள்ளது பேருந்து நிறுத்தத்தை சுற்றிலும் சாக்கடை மற்றும் குப்பையாக காட்சி அளிக்கிறது பேருந்து நிலையம் சுத்தமில்லாமல் தண்ணீர் தேங்கி சாக்கடையாகவும் துர்நாற்றமும் வீசுவதால் பயணிகள் உள்ளே செல்வதற்கு  அவதிப்படும் படியாக உள்ளது.இதனால்  பேருந்து வருவதற்கு காத்திருப்போர் வெயிலில் நின்று வருகின்றனர்.  இதில் அமர முடியாமல் வயதானவர் உடல்நிலை சரியில்லாதவர்கள் வெயிலில் நின்று மிகவும் சிரமத்திற்கு உள்ளாக வேண்டிய சூழல் உருவாகி வருகின்றது. ஆகையால் பேருந்து நிறுத்தத்திற்குள் இருக்கும் சேறு சகதிகளை  சரி செய்து பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று  மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bus stop ,Tha Bala ,
× RELATED வேந்தர் சீனிவாசன் வழங்கினார்...