×

தா.பழூர் ஒன்றியத்தில் அதிகளவில் நெல் அறுவடை விவசாயிகள் மகிழ்ச்சி

தா.பழூர், பிப்.5:  தா.பழூர் ஒன்றிய டெல்டா பகுதி விவசாயிகள் மூன்றாண்டுகளுக்கு பிறகு நெல் அறுவடை சிறப்பாக உள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றிய பகுதிகளில் 6000 ஏக்கர் சம்பா நடவு செய்யப்பட்டு தற்போது அறுவடை துவங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. டெல்டா பகுதியில் உள்ள இடங்கண்ணி, கூத்தங்குடி, அடிக்காமலை, வாழை குறிச்சி, காரைக்குறிச்சி, அருள்மொழி  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது அறுவடை துவங்கியுள்ளது. ஆற்றில் தண்ணீர் தாமதமாக வந்தாலும் நிறைவாக வந்ததால் விவசாயம் சிறப்பாக இருந்ததாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மூன்றாண்டுகளுக்கு பிறகு விவசாயம்  இந்த ஆண்டு சிறப்பாக இருந்ததாகவும், வரும் ஆண்டில் தண்ணீரை  உரிய பருவத்தில் திறந்து  விவசாயம் செய்வதற்கு  வழிவகை செய்ய வேண்டும்  என்று விவசாயிகள்
கோரிக்கை விடுத்தனர்.
நெல் விலை தற்போது இருப்பதை விட கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் தனியார் வியாபாரிகள் அதிக எடை வைத்து அதிக லாபம் பெற்று வருகின்றனர் அரசு நெல் கொள்முதல் நிலையம் தனியார் நெல் வியாபாரிகளுக்கு ஆதரவாகவும் விவசாயிகளுக்கு ஆதரவு இல்லை என்றும்  விவசாயி கொண்டுவரும் நெல்களை நான்கைந்து நாட்களுக்கு கிடப்பில் போடப்பட்டு பின்பு அதை தூற்ற வேண்டும் என்று அலக்கழிப்பு செய்வதாகவும், இதனை உடனேமாவட்ட கலெக்டரும், துறை அதிகாரிகளும் தா.பழூர் ஒன்றியங்களில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : paddy harvest farmers ,
× RELATED கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்