×

கஞ்சா விற்றவர் கைது

கொடைக்காவல், பிப். 5: கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்இன்ஸ்பெக்டர் தாமரைக்கண்ணன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது சந்தேகப்படும் வகையில் கைப்பையுடன் நின்றிருந்த ஒருவர் போலீசாரை கண்டதும் ஓட முயன்றார். உடனே போலீசார் அவரை பிடித்து கைப்பையை சோதனை செய்தனர். அதில் 1 கிலோ 700 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் கொடைக்கானல் எம்எம் தெருவை சேர்ந்த டென்சிங் கிறிஸ்டோபர் (23) என்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.சாலையில் சிந்தலாமா உங்கள் ரத்தம்...?இன்றைக்கு பெரும்பான்மையான விபத்துக்கள் மனித தவறினாலே நடைபெறுகிறது. பலருக்கும் வண்டியை இயக்க தெரிகின்ற அளவு அதனை முறையாக கையாள தெரிவதில்லை. இதனால் தன் தவறு தெரியாமலே தொடர்ந்து விபத்துக்களை ஏற்படுத்துகின்றனர். அல்லது சிக்கி கொள்கின்றனர்.எதிரே வாகனங்கள் வருகையில் முகப்பு விளக்கை டிம் செய்யும் பழக்கம் பெரும்பான்மையோருக்கு இல்லை. சொல்லப்போனால் அப்படி ஒரு சுவிட்ச் இருப்பது கூட பலருக்கும் தெரியாது. இதனால் எதிர் வரும் ஓட்டிகளின் கண் கூசும். இன்னொன்று நாம் ஓட்டி வரும் வாகனம் குறித்த விபரங்களை எதிராளியால் உணர்ந்து கொள்ள முடியாது. வாகனத்தின் அகலம், பொருட்களை பக்கவாட்டில் நீட்டியபடி எடுத்து செல்கிறோமா என்பது எதுவும் எதிர் வாகனங்களுக்கு புரிபடாது. பக்கத்தில்வந்ததும் நிலை தடுமாறி விபத்துக்கள் ஏற்படும்.அதிக போக்குவரத்து உள்ள இடங்களில் ‘டிம்’ நிலையிலே ஓட்டுவது நல்லது.வேகமாக சென்று திருப்பத்தில் பிரேக் போட்டு பின்பு ஆக்சிலேட்டர் கொடுக்கும் பழக்கம் பலரிடத்தில் உள்ளது. இதனால் டூவீலர் நிலைதடுமாறும். எனவே திருப்பத்தில் மெதுவாக சென்று எதிரே சாலை பார்வையாக தெரிந்ததும் வேகம் எடுக்கலாம்.

ரயில்வேகேட் போன்ற இடங்களில் காத்திருக்கும் போது வலதுபுறத்திலும் வாகனங்கள் அணிவகுக்கின்றன. இதனால் கேட் திறந்ததும் எதிரே உள்ள வாகனங்கள் இப்பகுதியை கடக்க சிரமப்படும். வேகமாக கடந்து செல்லும் நோக்கில் இந்த முறையை கடைபிடித்தாலும் நெரிசல் ஏற்பட்டு தாமதம் ஏற்படும் என்பதுதான் உண்மை.ரோட்டை கடப்பதற்கு ரோட்டின் ஒருமுனையில் இருந்து இன்னொரு முனைக்கு நேர்குறுக்காய் செல்ல வேண்டும். ஆனால் பலரும் கிடைமட்ட பாதையிலே செல்கின்றனர். இதனால் பாதசாரிகள் ரோட்டிலேயே ‘அதிகம் நேரம்’ செல்லும் நிலை ஏற்படுகிறது. வேகமாக வரும் வாகனங்கள் மோதும் அபாயம் உள்ளது.இரவில் சாலையோரத்தில் நிறுத்திய வாகனங்களை நகர்த்தும் போதும் முதலில் முகப்பு விளக்கை போட்டு கொள்ள வேண்டும். அப்போதுதான் பின்னால் வரும் வாகனங்கள் ரோட்டு பகுதிகளுக்குள் ஒரு வண்டி நுழைகிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும். ஆனாலும் பலரும் இதை கடைபிடிப்பதில்லை.

நெரிசல் மற்றும் ரயில்வே கேட் திறந்ததும் பலரும் ஹாரனை தொடர்ந்து அடிக்கின்றனர். ஹார்ன் அடித்தால் முன்னால் உள்ள வாகனங்கள் சட்டென்று மறைந்து வழி கிடைக்கும் என்ற எண்ணமோ தெரியவில்லை. அழுத்து அழுத்து என்று அழுத்துகின்றனர். இதனால் முன்னால் உள்ள வாகன ஓட்டிகளுக்கு எரிச்சல்தான் ஏற்படும்.இடம் கிடைத்தால்தான் முன்னால் உள்ள வாகனங்கள் ஒவ்வொன்றாய் நகரும். இந்த அடிப்படை விஷயங்களை புரிந்து கொள்ளுங்கள். நெரிசலான இடங்களில் பொறுமை மிக அவசியம். உச்சிவெயிலில் இண்டிகேட்டை மட்டும் போட்டு விட்டு சட்டென்று திரும்புகின்றனர். இண்டிகேட்டர் கிளாஸ் பல வண்டிகளில் கீறல் விழுந்து கலரே மாறிப்போய் இருக்கும். ஒலியும் கேட்பதில்லை. எனவே பகலில் ஹேண்ட் சிக்னல் உத்தமம். பக்கவாட்டில் கையை நீட்டினால் பின்னால் வரும் வாகனங்களால் எளிதில் உணர்ந்து கொள்ள முடியும்.வாகனத்தை எந்தநிலையிலும் கட்டுப்படுத்தி கொள்ளக்கூடிய வேகமே சிறந்த வாகன இயக்கம். சட்டென்று பக்கவாட்டில் இருந்தோ சந்துக்குள் இருந்தோ நாலு கால் பாய்ச்சலில் நாய் குறுக்கிட்டாலும் பதட்டப்படாமல் நிறுத்தக்கூடிய தன்மையே சிறந்தது.சாலையை கடப்பதற்காக டூவீலரில் காத்திருக்கும் போது கியரில் போட்டு கிளட்ச்சை பிடித்துக் கொண்டே இருப்பர். பெட்ரோல் டேங்க்கில் உட்கார்ந்திருக்கும் குழந்தை சேட்டையால் கிளட்ச்சை ‘விட்டுவிடும்’ அபாயம் உண்டு. வேகமான ஓட்டுபவர்தான் நல்ல ஓட்டுநர் என்ற எண்ணம் தவறு. தனக்கும், வண்டிக்கும், மற்றவர்களுக்கும் எவ்வித பிரச்னையையும் ஏற்படுத்தாத வாகன இயக்கமே இங்கு ஏராளமான உயிர்களை இன்னமும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.


Tags : Cannara ,soldier ,
× RELATED தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழப்பு!