×

கரந்தை பகுதியில் இன்று மின் நிறுத்தம்

தஞ்சை, பிப். 2: மாதாந்திர பராமரிப்பு காரணமாக கரந்தை பகுதியில் இன்று மின் விநியோகம் இருக்காது. தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடக்கிறது. எனவே இன்ற காலை 9 முதல் மாலை 5 மணி வரை கரந்தை, பள்ளியக்ரகாரம், பள்ளியேரி, திட்டை, திருவையாறு, கண்டியூர், நடுக்கடை, செங்கிப்பட்டி, சானுரப்பட்டி, புதுக்குடி, விளார், பாலோபநந்தவனம், சுங்கான்திடல், நாலுகால் மண்டபம், அரண்மனை பகுதிகள், நாஞ்சிக்கோட்டை, ராஜராஜி நகர், மருத்துவக்கல்லூரி, ஈஸ்வரி நகர், முனிசிபல் காலனி, புதிய பேருந்து நிலையம், புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, காவேரி நகர், வங்கி ஊழியர் காலனி, ஈபி காலனி, எலிசா நகர், கள்ளப்பெரம்பூர், நூற்பாலை, மாதாக்கோட்டை, வல்லம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சை ரோலர் பிளவர்மில், வஸ்தாச்சாவடி, பிள்ளையார்பட்டி, மொன்னையம்பட்டி, ஆலக்குடி, திருமலைசமுத்திரம், சக்கரசாமந்தம், களிமேடு, மானோஜிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு உதவி செயற்பொறியாளர் பஞ்சநாதன் தெரிவித்துள்ளார்.

பட்டுக்கோட்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் (புறநகர்) லட்சுமணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரம்பயம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடக்கிறது. இதையொட்டி கரம்பயம் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட ஆலத்தூர், கிளாமங்கலம், கரம்பயம், செண்டாங்காடு, முசிறி ஆகிய மின் பாதைகளுக்கு மின் விநியோகம் இருக்காது.

Tags : area ,Karanthai ,
× RELATED கோவையில் யானை மந்தைகளுடன் குட்டியானையை சேர்க்க முயற்சி!!