×

திருவிழாக்களில் காதை பிளக்கும் வாணவேடிக்கை பொதுமக்கள் கடும் பாதிப்பு

சிவகங்கை, பிப்.2:  சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு விழாக்களில் அதிக சத்தத்துடனான வெடிகளை வெடித்து வாணவேடிக்கைகள் நடத்துவதால் பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த காலங்களில் கோவில் விழாக்கள், இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான நிகழ்ச்சிகளில் வேட்டு எனப்படும் ஒரு வகை வெடிகள் வெடிப்பது வழக்கம். சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் தொடங்குவது உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் முக்கியமான நேரங்களை மக்களுக்கு தெரியப்படுத்தவே இவ்வாறு செய்யப்பட்டது. வேட்டு வகையிலான வெடிகள் அதிகமான உயரம் சென்று குறைவான சத்தத்துடன் வெடிக்க கூடியது. அதிக உயரம் சென்று வெடிப்பதால் அனைத்து பகுதிகளுக்கும் சத்தம் எளிதில் சென்றடையும். ஆனால் இந்த நிலை மாறி தற்போது திருமணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகள், விழாக்களில் அதிகபட்சமாக பல லட்ச ரூபாய் செலவு செய்து வாண வேடிக்கை நிகழ்ச்சி என நடத்துகின்றனர். சாலையின் குறுக்கே கயிறு கட்டி அதில் தொங்கவிடப்படும் வெடிகள் சிறிது நேரம் வண்ண ஒளியை உமிழ்ந்து பின்னர் வெடிக்கிறது. இந்த வெடிகள் அதிக சத்தத்துடனான ஒலியை எழுப்புகிறது.

இதே போல் வாணவேடிக்கை நிகழ்ச்சியாக நடத்தப்படுவதற்கு பயன்படுத்தப்படும் வெடிகள் ஆகாயத்தில் சில நிமிடங்கள் வண்ண வண்ண நிறங்களை உமிழ்ந்து பின்னர் அதிகமான சத்தத்துடன் வெடிக்கிறது. தற்போது அதிக சத்தம் மற்றும் அதிர்வை ஏற்படுத்தும் இந்த வகையான வெடிகளே அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இறப்பு நிகழ்ச்சிகளிலும் அதிக சத்தத்தை ஏற்படுத்தும் வெடிகளையே பயன்படுத்தி வருகின்றனர். இந்த வகையான வெடிகள் வெடிக்கும் போது அருகாமை வீடுகளில் உள்ளவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படுகிறது. மருத்துவமனைப்பகுதி, முதியோர், குழந்தைகள், நோய்வாய்ப்பட்டவர்கள் உள்ளிட்ட அனைவரும் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
மருத்துவமனை ஊழியர் ஒருவர் கூறுகையில், ‘‘இது போன்ற அதிக சத்தம் மற்றும் அதிர்வை ஏற்படுத்தும் வெடிகளால் இதயம், காதுகளில் பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது. பொதுமக்களுக்கு உடல் ரீதியிலான பாதிப்பை ஏற்படுத்தும் அதிக சத்தம் எழுப்பக்கூடிய வெடிகளை தடை செய்ய வேண்டும். குறிப்பிட்ட டெசிபலுக்கு அதிகமாக சத்தம் இருக்கும் வெடிகளை பறிமுதல் செய்ய வேண்டும்’’ என்றார்.

Tags : festivals ,
× RELATED கோயில் தேர் திருவிழாவில் அசம்பாவிதம்...