×

எஸ்.டி. ஈடன் பள்ளியில் நிமிர்ந்து நில் நிகழ்ச்சி

சேத்தியாத்தோப்பு, பிப். 1: வடலூர் எஸ்.டி. ஈடன் மெட்ரிக் பள்ளியில் நிமிர்ந்து நில் நிகழ்ச்சி நடந்தது.வடலூர் எஸ்.டி. ஈடன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 35வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி பொதுத்தேர்வு எழுதவிருக்கும் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் வகையில் நிமிர்ந்து நில் என்ற நிகழ்ச்சி நீயா நானா கோபிநாத் தலைமையில் நடந்தது. பள்ளி முதல்வர் சுகிர்தா தாமஸ், நிர்வாக இயக்குனர் தீபக் தாமஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. மாற்றத்தை வரவேற்போம் என்ற கருத்தை முன்வைத்து செய்கை நாடகத்தை மாணவர்கள் செய்து காட்டினர். படிப்பில் முதன்மை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகளை  ஊக்கப்படுத்துவதாகவும், மிகுந்த தன்னம்பிக்கையும் ஏற்படுத்தும் வகையிலும் கோபிநாத் உரை நிகழ்த்தினார். பள்ளி முதல்வர் சுகிர்தா தாமஸ்நன்றி கூறினார்.

Tags : Eden ,Eden School ,
× RELATED ஈடன் கார்டனில் இன்று மோதல்;...