×

பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் உடைந்த இருக்கைகளை சீரமைக்க கோரிக்கை

பொன்னமராவதி, பிப்.1: பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் பயணிகள் அமருவதற்கான இருக்கைகள் உடைந்துள்ளதை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதி நகரின் மையப் பகுதியில் பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நூற்றுக்கணக்கான பேருந்துகள் சென்று வருகிறது. இங்கு வரும் பயணிகள் அமருவதற்காக பேருந்து நிலையத்தில் கிழக்குப் பகுதியில் இரும்பு இருக்கைகள் (சேர்கள்) போடப்பட்டது. இதில் பல இருக்கைகள் உடைந்து சேதமாகி கிடக்கிறது. பல இருக்கைகள் காணாமல் போனது. பல்வேறு ஊர்களுக்கு செல்ல பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் வெயில் நேரங்களில் பஸ் நிலையத்திற்குள் வரும் போது அமர இடமின்றி தவிக்கின்றனர். இதில் முதியவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் aபயணிகள் அமருவதற்காக போடப்பட்ட இருக்கைள் உடைந்துள்ளதை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : rooms ,bus stand ,Ponnaravarathi ,
× RELATED பிஜேபி வார் ரூம் மூலம் ED வழக்கில் சிக்கியோரிடம் பணம் பறிப்பு என புகார்