×

கரூர் ராஜாஜி சாலையில் மணல் மாட்டு வண்டிகளால் கடும் போக்குவரத்து பாதிப்பு

கரூர், ஜன.31:கரூர் ராஜாஜி சாலை வழியாக போக்குவரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி செல்லும் மணல் மாட்டு வண்டிகளை  கட்டுப்படுத்திட வேண்டும் என வாகனஓட்டிகள்  எதிர்பார்க்கின்றனர். கரூர் நகராட்சிக்குட்பட்ட சர்ச் கார்னர்  பகுதியில் இருந்து மார்க்கெட் வழியாக ஐந்து ரோடு செல்லும் சாலை ராஜாஜி  சாலையாகும். இந்த சாலையின் வழியாக கரூரில் இருந்து ஐந்து ரோடு, புலியூர்,  பசுபதிபாளையம், நெரூர், வாங்கல் போன்ற பகுதிகளுக்கு செல்லும் அனைத்து  வாகனங்களும் சென்று வருகிறது. மேலும், காலை 8 மணி முதல் 10 மணி வரை அதிகளவு  வாகன போக்குவரத்து இந்த சாலையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காலை  நேரங்களில் கரூரில் இருந்து மேலப்பாளையம் பகுதிக்கு தினமும் 100க்கும்  மேற்பட்ட மாட்டு வண்டிகள் சென்று வருகிறது. மணல் ஏற்றியும், ஏற்றிச்  செல்லவும் சென்று வரும் இந்த மாட்டு வண்டிகள் பயணம் காரணமாக இந்த சாலையில்  காலை நேரங்களில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

கடந்த சில  மாதங்களுக்கு முன்பு வரை அதிகாலை நேரங்களில் மட்டுமே மாட்டு வண்டிகள்  சென்று வந்த நிலையில், தற்போது, போக்குவரத்து அதிகளவு நடைபெற்று வரும் காலை  நேரங்களிலும் மாட்டு வண்டிகள் சென்று வருவதால் கடும் போக்குவரத்து  பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, போக்குவரத்து அதிகளவு நடைபெறும்  காலை நேரங்களில் மாட்டு வண்டிகள் செல்ல தடை விதிக்க வேண்டும் என அனைத்து  தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர். அதிகாலை நேரத்திற்குள்ளேயே மாட்டு  வண்டிகளின் பயண ஏற்பாடுகளை மேற்கொள்ள அதிகாரிகள் வலியுறுத்திட வேண்டும்  எனவும் அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை  பார்வையிட்டு தேவையான மாற்று ஏற்பாடுகளை போக்குவரத்து நலன் கருதி மேற்கொள்ள  வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்து அதிகளவு நடைபெறும்  காலை நேரங்களில் மாட்டு வண்டிகள் செல்ல தடை விதிக்க வேண்டும் என அனைத்து  தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Karur Rajaji Road ,sand dunes ,
× RELATED ஏர்வாடி அருகே கடல் நடுவே உள்ள மணல்...