×

ஜாக்டோ- ஜியோவினர் 9வது நாளாக ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், ஜன. 31: திண்டுக்கல்லில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினர் 9வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர், பணியாளர்,  ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஜாக்டோ- ஜியோவினர் கடந்த 22ம்  தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் பல்வேறு போராட்டங்களில்  ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் யூனியன் அலுவலகம் அருகே நேற்று  9வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைமைக்குழு உறுப்பினர்கள்  கிருஷ்ணவேணி, விஜயகுமார், பாலமுருகன் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில்
புதிய  பென்சன் திட்டம் ரத்து, 21 மாத நிலுவை தொகை, 3500 சத்துணவு மையங்களை  மூடுவதை கைவிடுவது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.  200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : Jacotto-Giovanni ,
× RELATED ஜாக்டோ-ஜியோவினருக்கு ஆதரவாக தலைமை...