பள்ளி ஆண்டு விழா

நத்தம், ஜன. 31: நத்தம் ராம்சன்ஸ் மெட்ரிக்குலேசன்  மேல்நிலைப்பள்ளியில் 22வது ஆண்டு விழா, விளையாட்டு விழா நடந்தது. முன்னாள்  துணைவேந்தர் திருமலைசாமி தலைமை வகிக்க, கனரா வங்கி துணை பொதுமேலாளர்  சீனிவாசன், மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபாகரன், முனைவர் ராமநாதன், பள்ளி  ஆட்சி மன்றக்குழு தலைவர் தனபாலன் முன்னிலை வகித்தனர். தாளாளர் ராமசாமி  வரவேற்றார். தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற, தேர்தல் அதிக மதிப்பெண்  எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு, கேடயம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.  தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதில் கிளை மேலாளர் பாலாஜி,  பேராசிரியர்கள் மாஸ்கோ, சிவக்குமார், எழுத்தாளர் சங்க தலைவர் அய்க்கண்,  ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

× RELATED பால்குட திருவிழா