×

ஜாக்டோ, ஜியோவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசியினர் 10 பேர் கைது

வேலூர், ஜன.31: வேலூரில் ஜாக்டோ, ஜியோவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசியினர் 10 பேரை போலீசார் கைது செய்தனர். வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே ஏஐடியுசி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சிம்புதேவன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் மாணிக்கம் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாநில துணை தலைவர் தேவதாஸ் கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தின்போது, அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று பேச்சுவார்த்தைக்கு அழைத்து தீர்வு காணாததையும், அரசு பள்ளிகள், அரசு துறைகளை தனியார் மயமாக்குவதையும், நிரந்தர தன்மைகொண்ட பணியை தொகுப்பூதியம், தற்காலிக பணிகளாக மாற்றுவதையும், உரிமைக்காக போராடியவர்களை கைது செய்வதையும் கண்டித்தும், மாணவர்களின் இலவச கல்வி பெறும் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உரிய அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏஐடியுசியைச் சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags : AIDUC ,protesters ,
× RELATED ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளன குழு கூட்டம்