×

ஜாக்டோ- ஜியோவிற்கு ஆதரவு தெரிவித்து துப்புரவு பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்

வந்தவாசி, ஜன.31: வந்தவாசியில் ஜாக்டோ- ஜியோ அமைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து துப்புரவு பணியாளர்கள் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடந்த 22ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ஜாக்டோ- ஜியோவினருக்கு ஆதரவாக வந்தவாசி நகராட்சி ஊழியர் சங்கம் சார்பில் நகராட்சி அலுவலகம் முன் நேற்று, துப்புரவு பணியாளர்கள் சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்க செயற்குழு உறுப்பினர் கோபிநாத் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராமு, துப்பரவு பணியாளர்கள் சங்கத்தலைவர் மதுரைவீரன், செயலாளர் லோகநாதன், பொருளாளர் முருகேசன், துணைத்தலைவர்கள் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அனைவரும் பணிக்கு திரும்பினர்.

Tags : Sanctuary workers ,
× RELATED மழையால் வீட்டின் சுவர் இடிந்து பள்ளி மாணவி பலி கலசபாக்கம் அருகே பரிதாபம்