×

கமலாலய குளத்தில் குப்பை கொட்டுவதால் துர்நாற்றம்

நாமக்கல், ஜன. 30: நாமக்கல் மலைக்கோட்டை கமலாலய குளத்தில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால் தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது.நாமக்கல்  மலைக்கோட்டை தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மலைக்கோட்டையின்  மேற்கு பகதியில் திருபாற்குளமும், ஜெட்டி குளமும் உள்ளது. மலைக்கோட்டையின்  தென்கிழக்கு பகுதியில் பேருந்து நிலையம் எதிரே கமலாலய குளம் உள்ளது.  
மிகவும் மோசமான நிலையில் இருந்த இந்த குளங்கள் நாமக்கல் எம்எல்ஏ பாஸ்கர்  முயற்சியால் தூய்மை படுத்தப்பட்டது. மேலும், கமலாலய குளத்தின் ஒருபுறம்  நேரு பூங்காவும், மற்றொரு கரையில் அம்மா பூங்காவும் அமைக்கப்பட்டது.  குளத்தில் தண்ணீர் நிரம்பு காலங்களில் படகு சவாரிக்கும் ஏற்பாடு  செய்யப்படுகிறது. இதனால் நகரில் உள்ள பொதுமக்கள் விடுமுறை நாட்களில்  குடும்பத்துடன் வந்து பொழுது போக்கும் இடமாக கமலாலய குளம் மாறியது.

இதனால்  நகராட்சிக்கும் வருவாய் கிடைத்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில  மாதங்களாக கமலாலய குளத்தை முறையாக பராமரிக்கவில்லை. குளத்தை சுற்றியுள்ள  தள்ளுவண்டி கடைக்காரர்கள், டிபன் கடைக்காரர்கள் குப்பை மற்றும் உணவு   கழிவுகளை குளத்தின் உள்ளே கொட்டி வருகின்றனர். இதனால் தண்ணீர் மாசடைந்து  துர்நாற்றம் வீசுவதுடன், 5 அடி உயரத்திற்கு புற்கள் முளைத்துள்ளது. மேலும்  பூங்காவிற்கு வரும் பொதுமக்கள்  திண்படங்களை சாப்பிட்டு விட்டு, பிளாஸ்டிக்  கவர்களை குளத்தில் வீசிச்செல்கின்றனர். இவை குளத்தில் ஆங்காங்கே   மிதக்கிறது.வெய்யில் காலம் தொடங்க உள்ள நிலையில் குளத்தில் உள்ள  நீரும் குறையத் தொடங்கியுள்ளது. எனவே நாமக்கல் நகராட்சி நிர்வாகம் கவனம்  செலுத்தி கமலாலய குளத்தில் குப்பை கழிவுகள் கொட்டுவதை தடுத்து நிறுத்த  நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : pond ,Kamalalaya ,
× RELATED சின்னமனூர் ஓடைப்பட்டி பொன்ராஜ் குளத்தில் பெயரளவு ஆக்கிரமிப்பு அகற்றம்