×

கார் டிரைவரை வெட்டி நகை, பணம் கொள்ளை

பெரம்பூர்: கொடுங்கையூரில் கார் டிரைவரை வெட்டி பணம், நகை, செல்போன் ஆகியவற்றை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.   கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (30), கார் டிரைவர். இவர் கொடுங்கையூர் காவேரி சாலையில் உள்ள கார் உரிமையாளரின் வீட்டில் இருந்து தினமும் காரை சவாரிக்கு எடுத்து செல்வது வழக்கம்.  நேற்று முன்தினம் அதிகாலை பைக்கை எடுத்துக்கொண்டு கார் உரிமையாளர் வீட்டுக்கு புறப்பட்டார்.

வழியில் 3 பேர் கொண்ட கும்பல் செந்தில்குமாரை வழிமறித்து, கத்தியால் தலை, கை ஆகிய இடங்களில் வெட்டிவிட்டு அவரது செல்போன், மோதிரம், பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பினர். அந்த வழியாக வந்தவர்கள் செந்தில்குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கொள்ளையர்களை தேடிவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி கொடுங்கையூர், வியாசர்பாடி, எம்.கே.பி.நகர், செம்பியம் ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது. இதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags : Car trim ,
× RELATED கார் டிரைவரை வெட்டி நகை, பணம் கொள்ளை