×

அரசு பள்ளி ஆண்டு விழா

ஆட்டையாம்பட்டி, ஜன.29: ஆட்டையாம்பட்டி அருகே இருசனம்பட்டியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 70வது குடியரது தின விழா மற்றும் பள்ளியின் 13வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு முன்னாள் தலைவர் ராம் மற்றும் மாதவராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியை பாஸ்கரன் வரவேற்றார். முன்னதாக நேருஜி, சுபாஷ்சந்திரபோஸ் இளைஞர் மன்றம் சார்பில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, பேனா வழங்கப்பட்டது. இதையடுத்து, பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது.

Tags : Government school year festival ,
× RELATED அரசு பள்ளி ஆண்டு விழா