×

ஆஞ்சநேயர் கோயிலில் தவறி விழுந்த அர்ச்சகர் மரணம்

நாமக்கல், ஜன.29:   நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் பூஜை செய்தபோது தவறி விழுந்து படுகாயமடைந்த அர்ச்சகர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாமக்கல் கோட்டை சாலை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(54). அர்ச்சகரான இவர், நேற்று முன்தினம், நாமக்கல் ஆஞ்சநேயர் ேகாயிலில், சுவாமிக்கு  மாலை அணிவித்துக் கொண்டிருந்தார். 18 அடி உயமுள்ள ஆஞ்சநேயருக்கு, 10 அடி உயரத்தில் உள்ள பலகை மீது ஏறி நின்று வெங்கடேசன் மாலை அணிவித்தார். அப்போது அவர் கால் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலன் அளிக்காததால் மீண்டும் கோமா நிலையில் ேநற்றிரவு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். அங்கிருந்த டாக்டரக்ள் பரிசோதித்து பார்த்து விட்டு, அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்தனர். இருப்பினும் தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்றிரவு 10.50 மணிக்கு அர்ச்சகர் வெங்கடேசன் மரணமடைந்தார். அவருக்கு ஜெயலட்சுமி(46) என்ற மனைவியும், அரவிந்தன்(26) என்ற மகனும் உள்ளனர்.

Tags : Archcher ,Anjaneya ,
× RELATED பள்ளிப்பட்டில் சேதமடைந்த மின் கம்பங்கள்: மாற்றியமைக்க கோரிக்கை