×

குடந்தை ஏஆர்ஆர் அறக்கட்டளை புதிய நிர்வாக உறுப்பினர் செயலர் பதவியேற்பு விழா

கும்பகோணம், ஜன. 29: கும்பகோணம் ஏஆர்ஆர் கல்வி குழுமத்தின் நிர்வாக பொதுக்குழு கூட்டம், டாக்டர் லைலா சுப்ரமணியம் அரங்கத்தில் நடந்தது.
ஆங்கில ஆசிரியை வரவேற்றார். ஏஆர்ஆர் கல்வி குழுமங்களின் தாளாளர் டாக்டர் சுப்ரமணியம் தலைமை உரையாற்றினார். கூட்டத்தில் ஏஆர்ஆர் அறக்கட்டளையின் புதிய நிர்வாக உறுப்பினர் செயலராக வைத்தியநாதன் பொறுப்பேற்றார். சுகமாலா வைத்தியநாதன் நிறைவேற்று அதிகாரியாக பொறுப்பேற்றார், கூட்டத்தில் ஆடிட்டர்கள் ராஜேந்திரன், சிவகுருநாதன் பேசினர். மேலும் கூட்டத்தில் அறக்கட்டளை புதிய நிர்வாக உறுப்பினர், செயலாளர் முன்மொழிந்து அறிவுறுத்திய கருத்துக்களை கல்வி குழுமத்தின் நிர்வாக அலுவலர் ராஜமாணிக்கம் மற்றும் ஏஆர்ஆர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஏஆர்ஆர் எஸ்எல் வித்யாஸ்ரம் (சிபிஎஸ்இ) பள்ளி, ஏஆர்ஆர் எஸ்எல் நர்சரி மற்றும் பிரைமரி மேலக்காவேரி பள்ளிகளின் முதல்வர்கள், துணை முதல்வர், கல்வியியல் மேற்பார்வையாளர் உள்ளிட்ட பலர் பேசினர். ஏஆர்ஆர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கூடுதல் முதல்வர் லதா மோகன், ஏஆர்ஆர் எஸ்எல் வித்யாஸ்ரம் (சிபிஎஸ்இ) பள்ளி ஒருங்கிணைப்பாளர் மகேஷ் பங்கேற்றனர். தமிழ் ஆசிரியர் பாரிவேல் நன்றி கூறினார்.


Tags : Kudan ARR Trust ,Secretariat ,Executive Member ,
× RELATED புதிய எம்.பி.க்களை வரவேற்க தயார்: மக்களவை செயலகம் அறிவிப்பு