×

திருநள்ளாறு - அம்பகரத்தூர் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும்

காரைக்கால், ஜன.29: காரைக்கால் திருநள்ளாறு-முதல் அம்பகரத்தூர் வரை அமைக்கப்படும் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என புதுச்சேரிவேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் அறிவுறுத்தினார்.காரைக்கால் திருநள்ளாறு முதல் அம்பகரத்தூர் வரையிலான சுமார் 12 கி.மீ. சாலையை மேம்படுத்த ரூ.11.80 கோடி நபார்டு வங்கி நிதியுதவியுடன், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது. கடந்த ஓராண்டாக பணிகள் மந்த  நிலையில் நடைபெற்றுவந்ததால், பாமக செயலர் தேவமணி சாலையை உடனே விரைவுப்படுத்தாவிட்டால், சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தார். மேலும், பல சமூக ஆர்வலர்களும், சாலையை விரைவுப்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில், கடந்த வாரம் சாலை மேம்படுத்தும் பணி மீண்டும் தொடங்கப்பட்டது. இப்பணியினை, புதுச்சேரி வேளாண்  அமைச்சர் கமலக்கண்ணன், மாவட்ட பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் ராஜசேகரன் மற்றும் அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.பின்னர் அமைச்சர் கமலக்கண்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
திருநள்ளாறு முதல் அம்பகரத்தூர் வரையிலான சாலைப் பணியை வரும் மார்ச் மாத இறுதியில் பணிகளை முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 20 பள்ளிகள் பொலிவுறு வகுப்பறைகளாக மாற்றப்படுகிறது. பல சாலைகள்  சிமென்ட் சாலைகளாகவும், பேருந்து நிறுத்தங்கள் விரிவாக்கமும் செய்யப்படும். இதுதவிர, கொம்யூன் பஞ்சாயத்து மூலமாகவும் பல்வேறு கிராமங்களில் சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
× RELATED கொள்ளிடம் அக்ரஹார தெருவில் தேங்கி கிடந்த குப்பைகள் அகற்றம்