×

சட்டவிரோத கருகலைப்பை தவிர்க்க ஸ்கேன் மையங்களில் ஆய்வு

ஊட்டி, ஜன. 25: சட்டவிரோத கருகலைப்பை மற்றும் பாலினம் அறிதல் போன்றவற்றை  தவிர்க்கும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஸ்கேன் மையங்களிலும், மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஆய்வு செய்யப்படும் என சுகாதார பணிகள் இணை இயக்குநர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம்,பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் என்ற திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று நடந்தது. இதில் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குநர் இரியன் ரவிக்குமார் தலைமை வகித்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியம், குழந்தைகள் சிகிச்சை நிபுணர் நளினி, மகப்பேறு மருத்துவர் ஜோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதைத்தொடர்ந்து சுகாதார பணிகள் இணை இயக்குநர் இரியன் ரவிக்குமார் கூறியதாவது: மத்திய அரசு சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் செயல்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களை காட்டிலும் நீலகிரியில் ஆண், பெண் பாலின விகிதம் சிறப்பாக உள்ளது.  ஆயிரம் ஆண்களுக்கு, 1045 பெண் குழந்தைகள் பிறக்கின்றன.வயது வந்தோருக்கான பாலின விகிதத்தில் ஆயிரம் ஆண்களுக்கு, 985 பெண்கள் உள்ளன. இதனை பலப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரியில் சட்ட விரோத கருகலைப்பு செய்யப்படுவதில்லை. மாவட்டத்தில் மொத்தம் 40 ஸ்கேன் மையங்கள் உள்ளன. இவைகள் 3 மாதத்திற்கு ஒருமுறை ஆய்வு  செய்யப்படுகிறது. இதில், முறையான பயிற்சி பெற்றவர்கள் இருக்கிறார்களா, கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து தெரிவிக்கப்படுகிறதா, சட்டவிரோத கருகலைப்பு ெசய்யப்படுகிறதா என தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும், சட்டத்திற்குட்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி கர்ப்பமாக இருக்கும் பெண்கள், குழந்தைகள், உடல்நிலை மோசமான நிலையில் உள்ளவர்கள் போன்றோர் பாதுகாப்புடன் கருகலைப்பு செய்ய உரிமை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.மேலும், சுகதார பணிகள் இணை இயக்குநர் தலைமையில் துணை இயக்குநர், மூத்த மகப்பேறு மருத்துவர் உள்ளிட்டோர் அடங்கிய கமிட்டி அமைக்கப்படும். இந்த குழு பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ அறிக்கைகளை ஆய்வு செய்து கருவை கலைப்பது, நிராகரிப்பது தொடர்பான பரிந்துரைகளை அளிக்கும், என கூறினார்.

Tags : scan centers ,
× RELATED வரி ஏய்ப்பு குற்றச் சாட்டில் ஆர்த்தி...