×

திருவையாறில் ஆராதனை விழா பஞ்சரத்ன கீர்த்தனை பாடி இன்று தியாகராஜருக்கு இசை அஞ்சலி

திருவையாறு, ஜன. 25:  2திருவையாறு ஆராதனை விழாவில் தியாகராஜருக்கு பஞ்சரத்ன கீர்த்தனை பாடி இன்று இசை அஞ்சலி செலுத்தப்படுகிறது.
தஞ்சை மாவட்டம் திருவையாறில் தியாகராஜரின் 172வது ஆராதனை விழா கடந்த 21ம் தேதி துவங்கியது. இதைதொடர்ந்து தினம்தோறும் கர்நாடக இசைக்கலைஞர்களின் பாட்டு, இசைநிகழ்ச்சி நடந்து வருகிறது. நிறைவு நாளான இன்று காலை 8.30 மணிக்கு மங்கள இசை நடக்கிறது. அதைதொடர்ந்து 9 மணிக்கு விழா பந்தலில் ஆயிரக்கணக்கான கர்நாடக இசைக்கலைஞர்கள், பாடகர்கள் பங்கேற்று ஒரே குரலில் பஞ்சரத்ன கீர்த்தனை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்துகின்றனர். முன்னதாக தியாகராஜர் இல்லமான திருமஞ்சன வீதியிலிருந்து தியாகராஜர் சிலை ஊர்வலமாக உஞ்சவர்த்தனி பஜனையுடன் புறப்பட்டு விழா பந்தலை அடைகிறது. அப்போது சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. அதைதொடர்ந்து இசைநிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7 மணிக்கு நிர்மலா சுந்தர்ராஜனின் பாட்டு, 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லக்கில் தியாகராஜர் வீதியுலா நடக்கிறது. இரவு 8.40 மணிக்கு சுதா ரகுநாதனின் பாட்டு கச்சேரி நடக்கிறது. இரவு 11 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா முடிவடைகிறது.



Tags : ceremony ,Aradhana ,Bhagirathana Keerthan ,
× RELATED அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா