×

மண்டல மேலாளரை கண்டித்து நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்கள் போராட்டம்

சிவகங்கை, ஜன.24: சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, மானாமதுரை, இளையான்குடி, திருப்பத்தூர் உள்ளிட்ட 6 இடங்களில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழக கிடங்கு உள்ளது. இதற்கான மண்டல அலுவலகம் சிவகங்கையில் உள்ளது. இந்நிலையில் மண்டல மேலாளர் அலுவலகத்தில் பைல்கள் எவ்வித நடவடிக்கையும் இன்றி கிடப்பில் உள்ளதாகவும், மண்டல மேலாளர் ஊழியர்களை தரக்குறைவாக பேசுவதாகவும் கூறி நேற்று அனைத்து கிடங்குகள் அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், லோடுமேன்கள் 220 பேர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.சிவகங்கையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் தாசில்தார் ராஜா பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து கலெக்டர் ஜெயகாந்தனிடம் ஊழியர்கள் புகார் தெரிவித்தனர்.

Tags : Consumer Affairs Corporation ,manager ,
× RELATED திருப்பூர் மண்டல போக்குவரத்து பொது மேலாளர் சஸ்பெண்ட்