×

அன்னமங்கலம், தொண்டமாந்துறையில் குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் முறையீடு

பெரம்பலூர்,ஜன.24:  அன்னமங்கலம்,  தொண்டமாந்துறை ஊராட்சிகளில் இன்னமும் குடிநீர் பிரச்சினை  தலை விரித்தாடுகிறது என திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் பெண்கள் முறையிட்டனர்.பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய திமுக சார்பில், அன்ன  மங்கலம், தொண்டமாந்துறை ஆகிய கிராமங்களில் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடை  பெற்றது. வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய செலாளர் நல்லதம்பி தலைமை யில் நடை  பெற்ற இந்த கூட்டங்களில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது, அன்னமங்கலம் தொண்டமாந்துறை ஊராட்சிகளுக்கு நடுவே கல்லா ற்றின் குறுக்கே கட்டிமுடித்து 2 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் பாசனத்திற்கு ஏற்ப வரத்து  வாய்க்கால்கள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் அணைக் கட்டில் தண்ணீர்  நிரம்பினாலும் சுற்றிலுமுள்ள நிலங்களுக்கு தண்ணீர் திறந்து விட  வழி யில்லாமல் உள்ளது.   4கிலோ மீட்டர் நீளத்திற்கு கட்ட வேண்டிய வரத்து  வாய்க்கால்கள் 2கிலோ மீட்டர் நீளத்திற்குக் கூட கட்டப்பட வில்லை. கட்டிய  வரத்து வாய்க்கால்கள் தூர்ந்து போய் புதர்கள் மண்டிக் கிடக்கிறது. இதனால்  அணையிலிருந்து வெங்கலம் ஏரிக்கு மட்டுமே தண்ணீர் திறந்து விட முடியும்.  அருகிலுள்ள வயல்களுக்கு பயனே இல்லாமல் போய் உள்ளது. அன்னமங்கலம்,  தொண்டமாந்துறை ஊராட்சிகளில் இன்னமும் குடிநீர் பிரச்சி னை  தலை விரித்தாடுகிறது. போதுமான மருத்துவமனை வசதி இல்லாதது, பஸ் வசதி, தெரு  விளக்குகள் இல்லாதது குறித்து பொதுமக்கள் குமுறினர். இந்த கூட்டத்தில்  முன்னாள் திமுக அமைச்சர் கே.பி.பி.சாமி, மாவட்ட செயலாளர்  குன்னம் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்கள் கேள்விகளுக்கு பதில்  அளித்து பேசினர். கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ துரைசாமி,  மாவட்ட துணை செயலாளர் பாஸ்கர்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Drinking Water Issue ,Annamangalam ,
× RELATED பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க...