×

காப்பு காட்டை ஆக்கிரமித்து விவசாயம் செய்தவர் கைது

ஊட்டி, ஜன. 24: ஊட்டி கிளன்மார்கன் அருகேயுள்ள கேஜ்மட்டம் பகுதியில் நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட காப்பு காட்டில் சுமார் 5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்த பழங்குடியினர் அல்லாத நபரை கடந்த சில நாட்களுக்கு முன்பு வனத்துறையினர் கைது செய்தனர். இதனை கண்டித்து கோத்தர் பழங்குடியின மக்கள் ஊட்டியில் உள்ள நீலகிரி கோட்ட மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 இதுகுறித்து கோத்தர் பழங்குடியின மக்கள் கூறுகையில், கிளன்மார்கன் பகுதியில் நாங்கள் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறோம். இந்நிலையில் ஜனவரி மாதத்தில்கோயில் திருவிழாவின் போது விரதம் இருப்போம். அப்போது ஊரை விட்டு வெளியே வர கூடாது என்ற கட்டுபாடு இருப்பதால் நாங்கள் கோயிலுக்கு சென்றிருந்தோம். விவசாய நிலத்தில் கால்நடைகள் ஏதேனும் சென்று விட வாய்ப்புள்ளதால் அதனை பார்த்து வருமாறு ஒருவரை அனுப்பி இருந்தோம். அந்த நபர் தோட்டத்தை பார்த்து வரும் போது அவரை வனத்துறையினர் ைகது செய்துள்ளனர், என்றனர்.
 இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன் கூறுகையில், கிளன்மார்கன் பகுதியில் சுமார் 14 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. இதில் 9 ஆயிரம் ஏக்கர் நிலம் காப்பு காடுகள் ஆகும். மீதமுள்ளவை தமிழ்நாடு வன சட்டம் 1882ன் படி பிரிவு 26ன் கீழ் பாதுகாக்கப்பட்ட நிலமாகும். இந்நிலையில் இப்பகுதிகளில் காப்பு காட்டை ஆக்கிரமித்து பழங்குடியினர் அல்லாத வெளியாட்கள் ஆக்கிரமித்து காய்கறி விவசாயம் மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டுகள் இருந்து வந்தது. சுமார் 5க்கும் மேற்பட்ட வெளியாட்கள் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருவதாக ஆய்வில் தெரியவந்தது. இந்நிலையில் வனத்துறையினர் கேஜ்மட்டம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட போது தலைகுந்தா பகுதியை சேர்ந்த ஷானவாஸ்(33) என்பவர் சுமார் 5 ஏக்கர் காப்பு காட்டை ஆக்கிரமித்து விவசாயம் செய்திருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். மற்றபடி பழங்குடியின மக்களை எந்த தொந்தரவும் செய்யவில்லை, என்றார்.  இதனிடையே கோத்தர் பழங்குடியின மக்கள்கைது செய்த ஊழியரை விடுதலை செய்ய கோரி மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட் டனர் நடத்தி வருவதை அறிந்த டி.எஸ்.பி., திருமேனி, இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் மற்றும் போலீசார்  பழங்குடியின மக்களுடன் பேச்சு நடத்தினார்கள். ஆனால் அவர்கள் மாலை வரை கலைந்து செல்லவில்லை.



Tags : backyard ,
× RELATED போலீஸ் விசாரணை புறகரைப்பட்டியில் புதிதாக தொடக்கப்பள்ளி துவங்க உத்தரவு