×

ரவணசமுத்திரத்தில் முஸ்லிம் லீக் செயல்வீரர்கள் கூட்டம்

கடையம், ஜன. 24:  கடையம் அருகே  ரவணசமுத்திரம் ஹனபி பள்ளிவாசல் அரபிப்பாடசாலையில்  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலங்குளம் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நெல்லை மேற்கு மாவட்ட துணை தலைவர் ஷாஹூல் ஹமீது தலைமை வகித்தார். பள்ளிவாசல் இமாம் முகம்மது முஸ்தபா குர்ஆன்  ஓதி துவக்கி வைத்தார். ஆலங்குளம் தொகுதி அமைப்பாளர் முகம்மது யஹ்யா வரவேற்றார்.  நெல்லை மேற்கு மாவட்ட அமைப்பு செயலாளர் அப்துல் காதர், தலைமை நிலைய பேச்சாளர் தென்காசி முகமது அலி  பேசினர். கடையம் ஒன்றிய தலைவர் தாஜூதீன் துணைத்தலைவர் ரிபாய், ரவணசமுத்திரம் துணைத் தலைவர் மைதீன் பிச்சை,  மாலிக் நகர் செயலாளர் திவான் பக்கீர் மைதீன் வீராசமுத்திரம் தலைவர் நூர்முகம்மது,  மாவட்ட துணை செயலாளர் நல்லாசிரியர் செய்யது மசூது,  ஆலங்குளம் தொகுதி துணை அமைப்பாளர் பழக்கடை சுலைமான், கடையம் ஒன்றிய செயலாளர் காதர்மொய்தீன்,  முதலியார்பட்டி செயலாளர் காதர்மைதீன்  முன்னிலை வகித்தனர்.

பிப்ரவரி 16ம் தேதி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத் ஆகியோர் கலந்து கொள்ளும்,  மதுரை ஒத்தக்கடையில் நடைபெற உள்ள முஸ்லீம் லீக் மாநில மாநாட்டிற்கு ஆலங்குளம் பகுதியில் இருந்து சுமார் 25 வாகனங்களில் 500 நபர்களை அழைத்து செல்வது. முதலியார்பட்டி ரஹ்மத் நகரில் உள்ள வளைவு பகுதி மிகவும் ஆபத்தான பகுதியாக உள்ளது. இப்பகுதியில் அறிவிப்பு பலகைகள் வைத்தும், வேகத்தடைகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். துணைமின் நிலைய அலுவலகத்தை கடையம் நகருக்குள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஏற்பாடுகளை மாவட்ட இளைஞரணி பொருளாளர் பீரப்பா, மாவட்ட மாணவரணி பொருளாளர் தமீம் அன்சாரி  செய்திருந்தனர். பொட்டல்புதூர் தலைவர் முகமது மீரான், செயலாளர் ஹஸன் முகைதீன், துணைத்தலைவர் அப்பாஸ், ஆலங்குளம் தொகுதி இளைஞரணி  தலைவர் முஹம்மது ஹாலித்,  ஆலங்குளம் தொகுதி இளைஞரணி செயலாளர் சாஜித், சாம்பவர் வடகரை செயலாளர் ரசூல் முகம்மது  கலந்து கொண்டனர்.
ரவணசமுத்திரம் பிரைமரி செயலாளர் இக்பால் நன்றி கூறினார்.

Tags : activists ,Muslim League ,Ravana Samartha ,
× RELATED பாகிஸ்தான் முஸ்லிம் லீக் தலைவராக நவாஸ் ஷெரீப் மீண்டும் தேர்வு