×

ஆழ்வார்குறிச்சியில் தெப்பத்திருவிழா

கடையம்,ஜன.23: ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி அம்பாள் உடனாய சிவசைலநாத சுவாமி கோயில் தெப்பத்திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.ஆழ்வார்குறிச்சி அருகே சிவசைலத்தில் உள்ள சிவசைலநாதர் பரமக்கல்யாணி கோயிலில் 25ம் ஆண்டு தெப்ப உற்சவ திருவிழா ஆழ்வார்குறிச்சி தெப்பக்குளத்தில் நடைபெற்றது. இந்த ஆண்டிற்கான தெப்ப உற்சவம் 13ம் தேதி கால்நாட்டுடன் தொடங்கியது. 20ம் தேதி சிவசைலத்தில் இருந்து சுவாமி, அம்பாள் வெள்ளி சப்பரத்தில் ஆழ்வார்குறிச்சி திருக்குளம் விநாயகர் கோயிலுக்கு எழுந்தருளினர். 21ம் தேதி காலை விளா பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. சுவாமி, அம்பாள் கேடயத்தில் விநாயகர் கோயிலில் இருந்து எழுந்தருளி தருமபுரம் ஆதீன மடத்தில் உச்சிகால பூஜை, மாலை சாயராட்சை பூஜை, முடிவடைந்து சுவாமி, அம்பாள் கேடயத்தில் தெப்பத்திற்கு எழுந்தருளுதல் நிகழச்சி நடைபெற்றது.  தொடர்ந்து நடந்த தெப்ப உற்சவத்தின் போது சுவாமி, அம்பாள் தெப்பத்தில் 11 சுற்றுகள் சுற்றி வந்து மேளதாளம் முழுங்க வாண வேடிக்கையுடன் திருக்குளம் வீதி வலம் வந்து பெரிய தளவாய் மாடசாமிக்கு காட்சியளித்தனர்.  

அதன் பின் தருமபுரம் ஆதீனமடத்தில் இறங்கி நேற்று அதிகாலை சுவாமி அம்பாள் ரிஷபவாகனத்தில் வீதி உலா வந்து 2 சிவாச்சாரியார்கள் வைதீக கோலத்துடன் இரட்டை சோடஷ தீபாராதனையும் அபிஷேக தீபாராதனையும், இரவு 8 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் சிவசைலம் எழுந்தருளி அபிஷேகம் தீபாராதனையும் நடைபெற்றது.   தொடர்ந்து நடந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆழ்வார்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் பரிசு வழங்கினார். இதற்கான ஏற்பாட்டினை தெப்ப உற்சவ கமிட்டி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தக்கார் சத்ய சீலன், ஆய்வாளர் முருகன்,  செயல் அலுவலர் வெங்கடேஷ்வரன்  மற்றும் வியாபாரி சங்கத்தினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags :
× RELATED கோடைமழை காரணமாக திருக்குறுங்குடியில் விவசாய பணிகள் மும்முரம்