×

தா.பழூர் சிவாலயத்தில் வில்லேந்திய வேலவர் திருவீதி உலா

தா.பழூர், ஜன 22: தைப்பூசத்தையட்டி தா.பழூர் சிவாலயத்தில் வில்லேந்திய வேலவர் திருவீதி உலா காட்சி நடைப்பெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி  தரிசனம் செய்தனர்.அரியலூர் மாவட்டம் தா.பழூர் விசாலாட்சி சமேத விசுவநாதர் கோயில் தைப்பூச திருவிழா நேற்று நடைப்பெற்றது. இவ்விழாவையட்டி சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேகம் நடைப்பெற்றது. பின்னர் வள்ளி,தெய்வானை சமேத வில்லேந்திய  வேலவருக்கு  சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது. பின்னர்தீபாராதனை   காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாலை உற்சவ மூர்த்திக்கு பல்வேறு வண்ண மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பல்லக்கில் ஊர்வலமாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார்.

Tags : Vallandiya Velavar Thiruvaiti Tour ,Thalassery ,
× RELATED தலைஞாயிறில் ரத்ததான முகாம்