×

சலவை ஆலைகளில் இருந்து வெளியேறும் சாயக்கழிவுநீரால் மாசடையும் ஆவத்திபாளையம் ஓடை: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பள்ளிபாளையம்: சலவை ஆலைகளில் பணிகள் துவங்கியதால், காய்ந்து கிடந்த ஆவத்திபாளையம் ஓடையில் மீண்டும் சாயக்கழிவுநீர் ஓடத்துவங்கியுள்ளது. சாயமிடும் பணி மேற்கொண்டுள்ள சலவை ஆலைகளில் அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா ஊரடங்கால், பள்ளிபாளையம் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் கடந்த ஒன்றரை மாதங்களாக மூடப்பட்டிருந்தன. தொற்று குறைந்ததையடுத்து கடந்த திங்கட்கிழமை பள்ளிபாளையத்தில் உள்ள சாயப்பட்டறைகள், விசைத்தறி கூடங்கள் மீண்டும் இயங்கத் துவங்கியுள்ளன. பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் 50 சாயப்பட்டறைகள் இயங்கி வருகின்றன. சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உரிமம் பெறப்பட்ட இந்த சாயப்பட்டறைகளில், தற்போது சாயமிடும் பணிகள் துவங்கியுள்ளன. இந்நிலையில் துணிநூல் மற்றும் திருப்பூர் பணியன் துணிகளை வெள்ளைப்படுத்தும் பணியை மேற்கொள்ள இங்கு 20 சலவை பட்டறைகள் இயங்கி வருகின்றன. துணிகளை வெளுக்க பெற்ற அனுமதியை தவறாக பயன்படுத்தி இந்த சலவை பட்டறைகளில் சாயமிடும் பணிகள் நடைபெற்று வருவதாக குமாரபாளையம் மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திற்கு புகார் சென்றது. இதையடுத்து, சலவைப்பட்டறை உரிமையாளர்களை அழைத்து பேசிய சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வகுமார், சலவை பட்டறைகளில் சாயமிடும் பணிகள் நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும், மின் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரித்தார். இந்நிலையில், கடந்த 3 நாட்களாக பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் உள்ள சாயப்பட்டறைகளில் சாயமிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிகாரியின் எச்சரிக்கையையும் மீறி, பல்வேறு சலவை பட்டறைகளிலும் சாயமிடும் பணிகள் நடைபெற்று வருகிறது.ஆலைகளில் தேக்கி வைக்கப்படும் கழிவுநீர் இரவில் வெளியேற்றப்படுவதால், ஆவத்திபாளையம் ஓடையில் ரசாயன நெடி அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கடந்த ஒன்றரை மாதங்களாக காய்ந்து கிடந்த ஆவத்திபாளையம் ஓடையில், தற்போது சாயக்கழிவு நீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாயக்கழிவுகள் காவிரியில் கலப்பதால், காவிரி நீரை குடிநீருக்காக நம்பியுள்ள நகராட்சி நிர்வாகம் கவலையடைந்துள்ளது. …

The post சலவை ஆலைகளில் இருந்து வெளியேறும் சாயக்கழிவுநீரால் மாசடையும் ஆவத்திபாளையம் ஓடை: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Avathipalayam ,Pallipalayam ,Avathipalayam stream ,Dinakaran ,
× RELATED மண் பரிசோதனை முகாம்