×

உலமாக்கள் முப்பெரும் விழா

பரமக்குடி, ஜன.10: பரமக்குடியில் உலமாக்கள் சபையின் சார்பாக மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா மீலாது விழா, ஷரியத் விளக்க கூட்டம் என முப்பொரும் விழா நடைபெற்றது.விழாவிற்கு மேலப்பள்ளி வாசல் ஜமாத் தலைவர் வலியுல்லாஹ் தலைமை தாங்கினார். கீழ பள்ளிவாசல் இமாம் ஜலாலுதீன் வரவேற்றார்.
விழாவில் உலமாக்கள் சபையின் தலைவர் முகைதீன், சென்னை அடையாறு பள்ளிவாசல் இமாம் சத்துத்தீன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
திருக்குரான் ஓதும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
 விழாவில் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.


Tags : Ulama ,festival ,
× RELATED ஹாங்காங்கில் பன் திருவிழா கொண்டாட்டம்..!!