×

திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம்

ஆலங்குடி, ஜன.10: ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளம் மேற்கு ஒன்றியம், வேங்கிடகுளம் ஊராட்சி சந்தைப்பேட்டையில் உள்ள சமுதாய கூடத்தில் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, எம்எல்ஏ மெய்யநாதன் தலைமை வகித்தார். கூட்டத்தில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேங்கிடகுளம் ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமத்திற்கும் முழுமையான நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளக்கும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். கல்விக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.மகளிர் சுயஉதவிக்குழு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். வேங்கிடகுளத்திலிருந்து வலச்சேரிப்பட்டி வழியாக மதவடிக்காட்டிற்கு செல்லும் சாலையை புதுப்பிக்க வேண்டும். தை 1ம் தேதியை கருணாநிதியின் வழிகாட்டுதலின்படி தமிழ்ப்புத்தாண்டாகவும், சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், திருவரங்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கமணி, ஒன்றிய அவைத்தலைவர் அருளாந்து, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் செல்வம், மகிமைநாதன், சுப்பையா, மெய்யர் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதேபோல், தெட்சிணாபுரம், கொத்தக்கோட்டை, மாஞ்சன்விடுதி ஆகிய ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடந்தது. புதுக்கோட்டை: புதுகை வடக்கு மாவட்டம், குன்றண்டார்கோவில் ஒன்றியம் கீழையூர், விசலூர், அண்டக்குளம் உள்ளிட்ட கிராமங்களில் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக திமுக மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம் சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் சந்திரசேகர், தலைமை செயற்குழு உறுப்பினர் தமிழ்ராஜா, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் குறிஞ்சிவாணன், ஒன்றிய செயலாளர் சேட்டு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : meeting ,Panchayat Council ,DMK ,
× RELATED வாக்களிக்க பணம் தர இருப்பதாக புகார் ஊராட்சி மன்ற தலைவி வீட்டில் ரெய்டு