×

களியக்காவிளை அருகே இளம்பெண் மர்மச்சாவு

களியக்காவிளை, ஜன. 10:  கருங்கல் அருகே மாங்கரை பகுதியை சேர்ந்தவர் சேவியர் ஜாண். இவரது மகள் அஜிதா மேரி(29). கடந்த 13 மாதங்களுக்கு முன் அஜிதா மேரியை படந்தாலுமூடு அருகே மீனச்சல் பகுதியை சேர்ந்த அனீஷ்(31) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இதற்கிடையே நேற்று முன்தினம் காலை அஜிதா மேரிக்கு திடீர் என்று மயக்கம் ஏற்பட்டதாக கூறி குழித்துறையில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனீஷ் கொண்டு சென்றுள்ளார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ஒரு மணி நேரத்தில் அஜிதா மேரி இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த அஜிதா மேரியின் தந்தை சேவியர் ஜாண் மற்றும் உறவினர்கள், அஜிதா மேரி மரணத்தில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார் அளித்தனர். இதற்கிடையே அனீஷ் தரப்பில் களியக்காவிளை போலீசில், அஜிதா மேரிக்கு திருமணத்திற்கு முன்பே நோய் இருந்துள்ளது. அதை மறைத்து எனக்கு திருமணம் செய்து வைத்தனர். கடந்த 13 மாதங்களாக பல மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளித்து வந்தோம் இந்நிலையில் சம்பவத்தன்று திடீர் என்று மயக்கம் போட்டு விழுந்தார். குழித்துறை மருத்துவமனைக்கு  கொண்டு சென்றோம். ஆனால். சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார் என்று  தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து களியக்காவிளை போலீசார் அஜிதா மேரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணம் ஆகி ஒரு ஆண்டே ஆகியுள்ளதால் ஆர்டிஓ விசாரணை நடத்தப்பட உள்ளது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, பிரேத பரிசோனை அறிக்கை 2 நாட்களில் வரும் அதன் பின்னரே இவரது சாவு எப்படி என்று கூற முடியும். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

Tags : calicut ,
× RELATED பிரைம் வாலிபால் லீக் தொடர் இறுதி...