×

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடைகோரி மருந்து வணிகர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர், ஜன.9: அகில இந்திய அளவில் ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்வதை மத்திய அரசு தடை செய்ய  வலியுறுத்தி அரியலூர் அண்ணா சிலை அருகே மாவட்ட மருந்து வணிகளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மருந்து வணிகர் சங்க  மாவட்ட செயலாளர் சங்கர் தலைமை வகித்தார். சில்லரை மருந்து விற்பனையாளர் சங்க மாவட்ட தலைவர் அசோக்குமார், ஒருங்கிணைப்பு செயலாளர் ஜவகர்அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மருத்துவர்கள் சிவக்குமார், நாகராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆன் லைன் வணிகத்தின் மூலம் மருந்துகள் வாங்கினால் பொது மக்களுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கினர். ஆர்ப்பாட்டத்தில் மருந்து சில்லரை வியாபாரிகள்,  மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Prohibition ,pharmaceuticals trade unions ,
× RELATED ஈரோடு சட்டவிரோத மது விற்பனை; 10 பேர் கைது