×

செல்லம்பட்டி, சேடபட்டி பகுதி பயன்பெறும் திருமங்கலம் 6ம் கால்வாயில் வைகை தண்ணீர் நிறுத்தம் விவசாயிகள் வேதனை

உசிலம்பட்டி, ஜன. 9: செல்லம்பட்டி மற்றும் சேடபட்டி பகுதியிலுள்ள விவசாயிகளின் திருமங்கலம் மற்றும் 6ம் கால்வாயில் தண்ணீர் நிறுத்தத்தால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.இந்த பகுதி விவசாயிகள் பெரும்பாலும் வைகை தண்ணீரையே நம்பி விவசாயம் செய்கின்றனர். அதில் நேரடிப் பாசனமும், கண்மாய்களில் தேக்கி வைத்து விவசாயம் செய்யும் கிராமங்களும் உள்ளன. செல்லம்பட்டி ஒன்றியம் வாலாந்தூர், நாட்டாமங்கலம், உள்ளிட்ட கண்மாய்களைப்போல் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் ஒரு போகத்திற்கு பயன்படும். மழைக்காலங்களில் இரு போகத்திற்கு பயன்படும் தண்ணீர் அதிகளவு தேக்கி வைக்கப்படும். தற்போது வைகையிலிருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நேரடிப்பாசனத்தில் உள்ளவர்களும், கண்மாய்களில் தேக்கி வைக்கும் விவசாயிகளும் ஓரளவு பயன்பெற்றனர்.இதில் நேரடி பாசனத்தில் பயன்பெறும், ஆரியபட்டி, உச்சப்பட்டி, நல்லபெருமாள்பட்டி, அம்பட்டையன்பட்டி, மேட்டுப்பட்டி, வாகைக்குளம், திடீயன் உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர்கள் பிந்திய நிலையில் நடவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் வைகை தண்ணீர் கடந்த 10 தினங்களுக்கு முன்பு திருமங்கலம் கால்வாயில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வைகைத்தண்ணீர் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர்.
இதேபோல் திருமங்கலம் கால்வாயில் பிரிந்து செல்லும் ஆண்டித்தேவர் கால்வாய் என்றழைக்கப்படும் 6ம் கால்வாயில் வைகைத் தண்ணீர் கள்ளபட்டி பகுதி அளவிற்கே சென்றுள்ளது. அதன் பிறகு உள்ள ஒத்தப்பாறைப்பட்டி, சேடபட்டி ஒன்றியத்திலுள்ள ஓணாப்பட்டி, பெருங்காமநல்லூர், காளப்பட்டி பகுதியில் இதுவரை வைகைத்தண்ணீரை பார்க்காமல் விவசாயிகள் உள்ளனர். இந்த பகுதிகளிலுள்ள கால்வாயின் இருபுறங்களிலிலும் உள்ள தடுப்புச்சுவர்கள் இடிந்து விழுந்தும், சில இடங்களில் கால்வாயில் பாதி மூடியும் கிடக்கிறது. இதுவரை பொதுப்பணித்துறை நிர்வாகம் இந்தக்கால்வாயில் பழுதுபார்க்கும் பணியோ, தூர்வாரும் பணியோ, செய்ததால் விவசாயிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயிகள் கூறும்போது, ‘எங்கள் பகுதி விவசாயிகளுக்காக ஆண்டித்தேவர் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது கொண்டுவந்த திட்டம், அதிகாரிகள் அலட்சியத்தால் 6ம் கால்வாய் பயனற்று விவசாயிகளுக்கு பயனில்லாமல் கிடைக்கிறது’ என்றனர்.
குப்பணம்பட்டி ஆறுமுகம் கூறும்போது, ‘நேரடிப்பாசனம் உள்ளவர்களுக்கு இந்த பகுதியில் அறுவடையாகும் நிலையில் உள்ளது. இருந்தாலும் தென்வடலாக செல்லும் கால்வாயில் கிழக்கு புறமும், மேற்கு புறமும் விவசாய நிலங்கள் பிரிந்து கிடக்கிறது. அதில் கிடக்கும் மகசூலை கொண்டு வருவதற்கு டிராக்டர், மாட்டு வண்டிகள், கால்வாயை கடந்து செல்ல முடியாது. இதனால் சுமார் 2 கி.மீ. தூரம் சுற்றித்தான் வர வேண்டும். சிலர் விளையாத நெற்கதிர்கள் விளையும்வரை காத்திருக்கின்றனர்.

Tags : Kadampatti ,canal ,Tirumangalam 6 ,Chedapatti ,
× RELATED கோடப்பமந்து கால்வாயில் விழுந்து வாலிபர் உயிரிழப்பு